சர்வதேச திரைப்பட விழா..!தேர்வாகியுள்ள 12 திரைப்படம்..!முன்னணி நடிகர்களில் தனுஷ் மட்டும் 2 படங்கள்..!

0
719
Dhanush
- Advertisement -

சமீபத்தில் கோவா சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது சென்னையின் புகழ்பெற்ற சர்வதேச திரைப்பட விழா 16வது ஆண்டாக வரும் டிசம்பர் 13ம் தேதி தொடங்குகிறது.

-விளம்பரம்-

bestmovies

- Advertisement -

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த திரைப்பட விழா இந்தியாவின் முக்கிய திரைப்படம் சார்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. விழாவில் முதல்நாளில் ஜப்பானிய மொழி திரைப்படமான ’ஷாஃப்லிஃப்டர்’ திரையிடப்படுகிறது. இது கேன்ஸ் விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருதை வென்ற படமாகும். தவிர, சர்வதேசளவில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுக்களைப் பெற்ற திரைப்படங்களும் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன

மேலும், சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த விழாவில் விருது பெற தகுதியான பல்வேறு தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த விழாவில் மொத்தம் 12 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜனி, கமல், விஜய், அஜித், ஆகியோரின் ஒருவரது படம் கூட தேர்வாகவில்லை. ஆனால், முன்னணி நடிகர்களில் தனுஷின் வடசென்னை, சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், மற்றும் ராட்சசன்,96 போன்ற படங்கள் தேர்வாகியுள்ளது.மேலும், தனுஷின் மற்றும் ஒரு படமும் விரைவில் தேர்வாக இருப்பதாகவும் கூறபடுகிறது

Advertisement