லைகா-விஷால் இடையே தகராறு, சொத்து விவரங்களை நீதிமன்றத்தில் விஷால் தாக்கல் செய்ய உத்தரவு- பின்னணி இது தான்.

0
342
- Advertisement -

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழில் சினிமாவில் புரட்சி தளபதி என்று பட்டப்பெயரை எடுத்தவர் நடிகர் விஷால். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அனைவரும் எதிர்பார்த்து இருந்த விஷாலின் வீரமே வாகை சூடும் படம் பிப்ரவரி மாதம் தான் வெளியாகி இருந்தது. இந்த படத்தை து.பா. சரவணன் இயக்கி இருக்கிறார். இப்படத்தை து.பா. பிலிம் ப்ரோடக்சன் சார்பாக விஷால் தயாரித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் டிம்பிள் ஹயாத்தி , யோகி பாபு, ரமணா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இதனை அடுத்து விஷால் அவர்கள் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

லத்தி படம்:

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இந்தப் படத்தின் போஸ்டர், டீசர் எல்லாம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இப்படி ஒரு நிலையில் விஷாலின் சொத்து விவரங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, நடிகர் விஷால் அவர்கள் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் பட தயாரிப்புக்காக அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 21 கோடி 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.

விஷால் மீது லைக்கா நிறுவனம் கொடுத்த புகார்:

ஆனால், இந்த கடன் தொகையை லைக்கா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இந்த கடனை செலுத்துவது தொடர்பாக லைக்கா நிறுவனமும், விஷாலும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அந்த ஒப்பந்தத்தில், கடனை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைக்கா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் விஷால் தங்களுக்கு வழங்க வேண்டிய 21 கோடி 29 லட்சம் ரூபாயை வழங்காமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை தமிழ் உட்பட பிற மொழிகளில் வெளியிடவும், சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க வேண்டும் என்று லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

-விளம்பரம்-

விஷால் தரப்பில் சொன்னது:

பின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 15கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பதாக டெபாசிட் செய்ய வேண்டும்
என்று விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து இன்று விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை என்று விஷாலிடம் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு விஷால் தரப்பில், லைக்கா நிறுவனம் மேல்முறையீடு சென்றதால் தான் பணத்தை செலுத்தவில்லை. எங்களுக்கு ஒரே நாளில் 18 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு வட்டி கட்டி வருகிறோம்.

நீதிபதி போட்ட உத்தரவு:

ஆறு மாதங்கள் ஆனாலும் இந்த பணத்தை செலுத்த இயலாது என்றும் கூறியிருக்கிறார்கள். இதனை எடுத்து லைக்கா நிறுவனம் தரப்பில் கூறியிருப்பது, தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஆனால், அவர் தவறான தகவலை தெரிவிக்கிறார். அவருடைய கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடுங்கள் என்று கேட்டிருந்தார்கள். இப்படி இரு தரப்பு வாதங்களை விசாரித்த நீதிபதி, விஷாலின் சொத்து விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கும் ஒத்தி வைத்திருக்கிறது.

Advertisement