‘பிச்சைக்காரன் 2’க்கு டிக்கெட்டுக்கு 2,000 ரூ நோட்டு கொடுத்தவருக்கு திரையரங்கம் வைத்த ட்விஸ்ட்

0
1246
Pichaikkaran
- Advertisement -

பிச்சைக்காரன் 2 படத்திற்கு 2000 ரூபாய் நோட்டு கொடுத்து டிக்கெட் எடுக்க சென்ற நபர் திரையரங்கம் நிர்வாகத்திடம் விவாதத்தில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை போருரை சேர்ந்தவர் கோதண்டராமன். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் 2 படத்தை பார்ப்பதற்கு மதுரவாயிலில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கிற்கு சென்று இருக்கிறார்.

-விளம்பரம்-

அவர் அங்கு திரையரங்களில் டிக்கெட் எடுக்க தன்னிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டை கொடுத்திருக்கிறார். உடனே திரையரங்க நிர்வாகிகள் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து இருக்கின்றனர். உடனே அருகில் இருந்த பதாகையை காண்பித்து இருக்கிறார்கள். அதில், ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட் செல்லாது.என்று அறிவித்து இருக்கிறது. ஆகையால், 2000 ரூபாய் நோட்டுகள் இங்க வாங்கப்படாது. வங்கிகளிலேயே 2000 ரூபாய் நோட்டுகளை திருப்பி செலுத்திக் கொள்ளவும் என்று கூறி இருக்கிறார்கள்.

- Advertisement -

திரையரங்கில் 2000 ரூபாய் குறித்த சர்ச்சை:

இதை பார்த்த கோதண்டராமன் தன்னிடம் வேறு நோட்டுகள் இல்லை என்று கூறி தியேட்டர் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். பின் கோதண்டராமன், அனைத்து இடங்களிலுமே 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இப்படி இருக்கும் நிலையில் திரையரங்கில் ஏன் வாங்க மறுக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதனை அடுத்து தியேட்டர் நிர்வாகம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து இருக்கிறது.

விஜய் ஆண்டனி குறித்த தகவல்:

பின் திரையரங்கிற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி ரிசர்வ் வங்கி அறிவித்த அறிக்கையால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது இதை குற்றம் சாட்டியும் வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

பிச்சைக்காரன் 2 படம்:

அந்த வகையில் இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் பிச்சைக்காரன். இந்த படம் வசூல் ரீதியாக பெரிய அளவு வெற்றியடைந்தது. பின் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கிருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த படம் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் வெளியாகியிருக்கிறது.

விஜய் ஆண்டனி செய்த செயல்

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் இதுவரை நல்ல வசூலை ஈட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் திருப்பதியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு போர்வை, செருப்பு, பிளாஸ்டிக் விசிறி போன்ற பொருள்களை வழங்கி இருக்கிறார். அதோடு சென்னை ஓட்டேரி மகாலட்சுமி திரையரங்கில் 100க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களை பிச்சைக்காரன் 2 படத்தை இலவசமாக பாவிஜய் ஆண்டனி செய்த செயல்ர்க்க வைக்க படகுழுவினர் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

Advertisement