மூங்கில் டூத் பிரஷ் மூலம் லட்சக் கணக்கில் வருமானத்தை ஈட்டும் சென்னை இளைஞர்கள். சோசியல் மீடியாவில் குவியும் பாராட்டுங்கள். கார்த்திக் சோலை, அர்ஜுன், ஹரீஷ் கந்தன் என்ற மூவரும் சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர்கள். இவர்கள் கல்லூரியில் படிக்கும்போதே தொழில் தொடங்கி மில்லியன் கணக்கில் வருவாய் ஈட்ட வேண்டும் என்பது இவர்களுடைய கனவாக இருந்தது. 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல மக்கள் பாதிக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர்களுக்கு ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகளை செய்தார்கள். அதில் இந்த சென்னை நண்பர்கள் மூவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார்கள்.

அதன்பின் இந்த மூவரும் நலப்பணிகளில் ஒரு பகுதியாக நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். அந்த சமயத்தில் தான் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆங்காங்கே குவிந்து கிடப்பதை இவர்கள் கவனித்தார்கள். அதிலும் குறிப்பாக டூத் பிரஷ் கழிவுகள் அதிக அளவில் கொட்டுப்படுகிறது. நம் நாட்டில் பிளாஸ்டிக் டூத் ப்ரஸ் கழிவுகள் அதிகமாக இருப்பதற்கு எப்படியாவது தீர்வு கொண்டு வர வேண்டும் என்று இவர்கள் முடிவு செய்தார்கள். அதன் விளைவில் இவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

Advertisement

பின் இவர்கள் மூவரும் சேர்ந்து Terra என்ற நிறுவனத்தை 2018 ஆம் ஆண்டு நிறுவினார்கள். இதன் மூலம் இவர்கள் மூங்கில் டூத் பிரஸ்ஸை உற்பத்தி செய்து விற்பனை செய்யத் தொடங்கினார்கள். தற்போது Terra என்று அழைக்கப்படும் இந்த ஸ்டார்ட் அப் மறுசுழற்சிக்கும், மறு பயன்பாட்டிற்கும் உகுந்த பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிறுவனம் சென்னையில் உள்ளது. இதில் 24 ஊழியர்கள் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். மேலும், டூத் ப்ரஸ் தயாரிப்பில் உருவான இந்த நிறுவனம் தற்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த பல தயாரிப்புகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்கள்.

டூத் ப்ரஷில் தொடங்கி பின்னர் நாக்கை சுத்தம் செய்யும் கிளீனர், டூத் பவுடர், டூத் பேஸ்ட், சீப்பு, பைகள், செம்பு பாட்டில் போன்ற பல தயாரிப்புகளை terra நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இந்த பொருள்களை பேக்கிங் செய்ய இவர்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதில்லை. பேப்பர் கொண்டு இந்த பொருள்களை எல்லாம் பேக்கிங் செய்து விற்கிறார்கள். டூத் பவுடர், டூத் பேஸ்ட் போன்றவற்றை கண்ணாடி ஜாடிகளில் போட்டு விற்பனை செய்கின்றார்கள். இவற்றையெல்லாம் நேரில் மட்டுமில்லாமல் Terra டூத் ப்ரஸ் தயாரிப்புகள் என்ற வலைத்தளம் மூலமாகவும் இவர்கள் விற்பனை செய்கிறார்கள். அது மட்டுமில்லாமல் பெங்களூரில் 300 சில்லரை வர்த்தக ஸ்டோர்கள் மூலமாகவும் அமேசான் தளம் மூலமாகவும் இந்த பொருட்களெல்லாம் விற்பனையாகின்றன.

Advertisement

இவர்களுடைய பொருள்களெல்லாம் ஆஃப்லைன் விற்பனையை விட வலைத்தளம் மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் மூலம் தான் அதிகமாக விற்பனையாகிறது. மேலும், இந்த நிறுவனம் வட இந்தியாவிலிருந்து சில பொருட்களை வாங்கி அதை தரம் பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட பிறகு தான் இவர்கள் விற்கிறார்கள். இவர்கள் ஒரு வருடத்திற்கு ஒன்று முதல் 2 லட்சம் வரை டூத்பிரஷ் விற்பனை செய்கிறார்கள். அதோடு இதன் மூலம் ஒரு ஆண்டிற்கு 50 லட்சம் ரூபாய் வரை இவர்கள் வருமானம் ஈட்டுகிறார்கள். ஆரம்பத்தில் இவர்கள் இந்த நிறுவனத்தை தொடங்க பணம் மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஏனென்றால் கல்லூரி படிப்பை முடித்தவுடன் எந்த ஒரு முன்பணம் இல்லாமல், எந்த ஆதரவும் இல்லாமல் தான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.

Advertisement

இந்த நிறுவனத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க பல சவால்களை மேற்கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை எத்தனையோ பிராண்டுகள் வழங்கினாலும் சில நிறுவனங்கள் மட்டும் தான் வெற்றி அடைகிறது. அந்த வகையில் Terra நிறுவனமும் ஒன்று. இனிவரும் காலத்தில் ஒரு ஆண்டிற்கு ஒரு மில்லியன் டர்ன் ஓவர் வரும் அளவிற்கு உழைத்து இந்த Terra நிறுவனத்தை இந்தியா முழுவதும் பிரபலம் அடைய செய்வது தான் இவர்களுடைய நோக்கம் என்றும் கூறியிருந்தார்கள்.

Advertisement