தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர்.

Advertisement

அதே போல பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பல பெண்களும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் பிரபல நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக சின்மயிக்கு மெசேஜ் அனுப்புயுள்ளார்.

அந்த பெண்ணுடன் பேசிய உரையாடலை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார், அதில் தனது தோழியுடன் கூட அவர் அப்படி தான் நடந்து கொண்டார் என்று மோசமாக கல்யாண் மாஸ்டரை திட்டியுள்ளார் சின்மயி.

Advertisement

Advertisement

ஆனால், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் கல்யாண் மாஸ்டர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம் சாட்டிய அந்த பெண் கூறுவது தவறான விடயம் என்றும், நான் அந்த பெண்ணின் குற்றச்சாட்டை ஆதரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் ஆதாரம் இல்லாமல் கல்யாண் மாஸ்டரை எதற்காக குற்றம் சட்டினீர்கள் என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement