சின்மயி போன்றே அவரது அம்மாவும் இந்த கலைஞசரால் பாதிக்கப்பட்டுள்ளார்..!

0
278
Chinmayimom

வைரமுத்து மீதான பாடகி சின்மயியின் முன்வைத்த பாலியல் புகார் தமிழ் சினிமாவையே உலுக்கியுள்ள நிலையில் கர்நாடக சங்கீத உலகத்திலும் பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கிறது அதில் என் அம்மாவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

chinmayi

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சின்மயி பேசுகையில், கர்னாடக சங்கீத உலகிலும் இது போன்ற பாலியல் தொல்லைகள் உள்ளது. அதனால் தான் பல பெண்கள், இசை பயிற்சியையும், பாரத நாட்டியதையும், மிருதங்கத்தையும் விட்டார்கள்.

ர்நாடக சங்கீத உலகத்தில் நிறைய பெயர்கள் சொல்வேன். மேலும் என் அம்மாவின், சங்கீத வாழ்க்கை ஒரு பெரிய வித்வானால் பாழானது.அவர்களுடைய அதிகார வட்டம், பெரிய பெரிய தொடர்புகள் எப்படி ஒருவரை அச்சுறுத்த முடியும் என்பதை என்னுடைய 90களில் பார்த்தேன்.

எங்க அம்மா ஒரு ஆவணப்படம் செய்திருந்தார்கள். அதனை நீங்கள் செய்ததாக சொல்லக் கூடாது என எங்கள் அம்மாவை ஒரு பெரிய சங்கீத வித்வான் மிரட்டினார். எங்க அம்மா ஒத்துக்கொள்ளவில்லை என்பதற்காக அவருடைய சங்கீத வாழ்க்கையையே முடித்துவிட்டார்கள்.கர்நாடக சங்கீத உலகத்தில் நிறையவே இதுபோன்று நடக்கிறது என்று கூறியுள்ளார் சின்மயி.