வைரமுத்துவை பாராட்டி முதல்வர் போட்ட பதிவு – கடுப்பாகி புலம்பிய சின்மயி. அடேங்கப்பா இத்தனை ட்வீட்டா.

0
913
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். மேலும், இவர் இதுவரை 5800 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இவர் திரை உலகில் முதலில் இளையராஜாவுடன் பிறகு ஏ ஆர் ரகுமான் உடன் இணைந்து பாடல்களை எழுதி இருக்கிறார். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருந்தார்கள். ஆனால், உண்மையில் பாடகி சின்மயி கூறும் இந்த குற்றச்சாட்டு உண்மை இருக்கிறதா என்று பலரும் சந்தேகித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து எது செய்தாலும் அவரை குறித்து சின்மயி விமர்சித்துப் பேசி வருகிறார். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவின் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு ‘வைரமுத்து இலக்கியம் – 50’ என்ற லோகோவை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.

- Advertisement -

வைரமுத்துவின் இலக்கிய சாதனை:

இதற்கு சின்மயி விமர்சித்து டீவ்ட் போட்டு இருக்கிறார். வைரமுத்து அவர்கள் 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருந்தாலும் இலக்கிய உலகிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலகப் போர் போன்ற நாவல்களும், கவிதை தொகுப்புகளும் இன்றுவரை இலக்கிய உலகிலும் விற்பனையிலும் தன் இடத்தை பெற்றுள்ளனர். முத்து அவர்கள் இலக்கிய உலகில் நுழைந்து ஐம்பது ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

வைரமுத்து இலக்கியம் 50 லோகோ:

இதற்கு ரசிகர்கள் பலரும் கவிஞர் வைரமுத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், கவிஞர் ‘வைரமுத்து இலக்கியம் 50’ என்ற பெயரில் தமிழில் சமூக வலைதளங்களில் பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவின் பயணத்தை பாராட்டி முதல்வர் ஸ்டாலின் வைரமுத்து இலக்கியம் 50 என்று வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பது,

-விளம்பரம்-

வைரமுத்துவை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்:

தமிழோடு புதுமையும் அறிவியலையும் சேர்த்து சிறந்து விளங்கும் கவிதைகளை திரைப்பட பாடல்களை தேனருவி என கொட்டி நம்மை நனைக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுத்துப் பணியின் பொன்விழா இலச்சியினை வெளியீட்டேன். தன் தமிழால் கவிப்பேரரசு நூறாண்டு கடந்து நம்மை ஆளட்டும் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு வைரமுத்து அவர்கள் நன்றி தெரிவித்திருந்தார். இப்படி முகஸ்டாலின் அவர்கள் வைரமுத்துவை வாழ்த்தி இருப்பதை பார்த்து பலரும் வாவ் என்று சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வைரமுத்துக்கு பாராட்டி வருகிறார்கள்.

விமர்சித்து டீவ்ட் போட்ட சின்மயி:

இதை பார்த்து சின்மயி கொந்தளித்துப் போய் டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியது, இந்த வாவை பாத்துட்டு அவர பாராட்டுறீங்களே என்று அறிவாளிகள் தான் கேப்பாய்ங்க. எத்தன பொண்ணுங்க மேல கைய்ய வெச்சாலும் எல்லா சப்போர்டும் உண்டுன்னு வெட்ட வெளிச்சமா தெரியுதே நம்ம முற்போக்கு நாட்ல. பெண்கள் இங்க பாதுகாப்பு எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. நாம நம்ம வேலைய பாப்போம் என பதிவிட்டுள்ளார்.

உங்க தங்கச்சிக்கு நடந்தா தெரியுமா :

அதே போல ட்விட்டர் வாசி ஒருவர், அவருடைய வேலையில் அவர் சிறப்பானாவர், அவரது வரிகள் எல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கும் அது உங்களுக்கும் தெரியும் என்று பதிவிட்டதற்கு, அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை, உங்கள் தங்கையை அவர் துஸ்பிரயோகம் செய்தால் அப்பாவும் அந்த தீவிட்டியை ஆதரிப்பீர்களா ? நம்ம ஊர் காரங்க புத்தி இவ்ளோ கீக்கதம் தான். எல்லாம் அவன் அவனுக்கு அவன் அவன் வீட்ல நடக்கட்டும் அப்ப தெரியும் என்று ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

Advertisement