காக்கா முட்டை ரமேஷின் தந்தை இறந்திருக்கும் செய்திதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவை பொருத்தவரை குழந்தை நட்சத்திரமாக நடித்த எத்தனையோ நட்சத்திரங்களை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுவர்களை ரசிகர்கள் கண்டிப்பாக மறைந்திருக்க முடியாது. தமிழில் கடந்து 2014 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறனுடன் இணைந்து பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்து, வெளியிட்ட படம் தான் ‘காக்கா முட்டை’.
எம்.மணிகண்டன் இயக்கிய இந்த மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இப்படம் பல விருதுகளையும் அள்ளிக் குவித்தது. இந்த படத்தில் நடித்திருந்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது. அதோடு இந்த படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கும் நல்ல புகழ் ஏற்படுத்தி தந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதில் நடித்த சிறுவர்களின் குடும்பம் மற்றும் எதிர்காலத் தேவைக்கான உதவிகளை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஏற்றது.
பெரிய காக்கா முட்டை:
இந்த படத்தில் நடித்த பெரிய காக்கா முட்டை விக்னேஷ், அதற்குப் பிறகு அப்பா, அப்பா 2, அறம், புது வேதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட விக்னேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த புகைப்படங்கள் வைரல் ஆகி இருந்தது. காக்கா முட்டை படத்தில் பெரிய காக்கா முட்டை கதாபாத்திரத்தை விட ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் சின்ன காக்கா முட்டை ரமேஷ் தான். காக்கா முட்டை படத்தில், இவர் தனது இயல்பான நடிப்பால் மக்கள் மனதை கவர்ந்திருந்தார்.
ரமேஷ் குறித்து:
காக்கா முட்டை படத்தில், சின்ன காக்கா முட்டை கதாபாத்திரத்தில் நடித்த ரமேஷ், அதற்குப் பிறகு நிறைய படங்களில் நடித்துள்ளார். விக்ரமுடன் அவரது இசை வீடியோ ‘ஸ்பிரிட் ஆஃப் சென்னை’, ராகவா லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, நயன்தாரா நடித்த ‘அறம்’ ஆகியவற்றில் பணியாற்றியிருந்தார். இந்நிலையில் இவரின் தந்தை மறைந்திருக்கும் செய்திதான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தந்தை மறைவு:
அதாவது, சின்ன காக்கா முட்டை ரமேஷின் தந்தை சமீபத்தில் உடல் நலக்குறைவால் மறைந்துள்ளார். இவர் தந்தை இறந்து சில தினங்கள் ஆன நிலையில் தற்போது இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன் தந்தையை பிரிய மனம் இல்லாமல் கடைசி நிமிடங்களில் அவர் கைகளை பிடித்து ரமேஷ் கதரி அழுது உள்ளார். இந்நிலையில் தற்போது இந்த வீடியோவை பார்த்து அனைவரும் ரமேஷிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.