பொதுவாகவே சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி நாளடைவில் திரையில் பிரபலமான நடிகர்களாக பல பேர் வலம் வந்திருக்கிறார்கள். ஷாலினி, மீனா என பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் நடிக்க துவங்கி பிற்காலத்தில் மிகப்பெரிய நாயகியாக வலம் வந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் உலகநாயகன் கமலஹாசனே குழந்தை நட்சத்திரமாக தான் சினிமா உலகில் அறிமுகமானார். அப்படி குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகர் தான் சாக்ரி டோலெட்டி.

சலங்கை ஒலி படத்தில் பரதநாட்டிய கலைஞராக இருக்கும் கமல் ஒரு சிறுவனை அழைத்து போட்டோ ஷூட் எடுத்து இருப்பார். அந்த சிறுவன் தப்புத்தப்பாக படமெடுத்து கொடுப்பார். அதே சிறுவன் பாக்கியராஜின் சின்னவீடு படத்திலும் கல்பனாவின் தம்பியாக நடித்திருப்பார். இப்படி பல படங்களில் அந்த சிறுவன் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

Advertisement

ஆனால், நாளடைவில் அவர் என்ன ஆனார்? என்று பலருக்கும் தெரியவில்லை. அவரைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இந்த சிறுவன் நிஜ பெயர் சாக்ரி. தற்போது பிரபலமான இயக்குனராக உள்ளார். இவரின் அப்பா டாக்டர். ஆனால், இவருக்கு சினிமாவில் இருந்த ஆர்வத்தால் சில படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதி கொடுத்திருக்கிறார். அப்படித்தான் சாக்ரின் அப்பாவுக்கு இயக்குனர் பாலசந்தர், பாக்கியராஜ், கே விஸ்வநாத் என பல இயக்குனர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.

அதன் மூலம் தான் சாக்ரிக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. பின் சாக்ரி அமெரிக்காவில் வி.எப்.எக்ஸ் டிகிரி படித்து முடித்துள்ளார். மேலும், இவர் படிப்பை முடித்துவிட்டு டிஸ்னி நிறுவனத்தில் வேலை செய்திருந்தார். அப்போது தசாவதாரம் படத்துக்கு அமெரிக்கா சென்ற கமல் சாக்ரி பற்றி அறிந்து அவரிடம் பேசினாராம்.பிறகு தன்னுடைய படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் தற்போது இயக்குனராக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

Advertisement

கமல் நடித்த உன்னைப் போல் ஒருவன் படத்தை தெலுங்கில் ‘ஈ நாடு’ என்ற பெயரில் இயக்கி இருந்தார். அதேபோல் அஜித்தின் பில்லா-2 படத்தையும் இயக்கி உள்ளார். மேலும், சோனாக்‌ஷி சின்ஷாவை வைத்து வெல்கம் டு நியுயார்க் என்னும் ஹிந்தி திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து கொலையுதிர் காலம் என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

Advertisement

சினிமாவை தாண்டி ஹெல்ட் கேர் பிரிவில் Galvanon, HealthGrid போன்ற நிறுவனங்களை உருவாக்கினார். தற்போது care.ai என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவை கொண்டு இயக்கும் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருந்து வருகிறார்.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை பூர்வீகமாக கொண்டிருக்கும் சக்ரி டோலெட்டி இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Advertisement