2 நாள் காத்திருக்க முடியாதா ? இரண்டு சீரியலில் இருந்து நீக்கப்பட்ட காரணம் குறித்து கண்ணீர் மல்க கூறிய நடிகை.

0
32187
veena
- Advertisement -

இரண்டு சீரியலும் என் கையை விட்டு போகிவிட்டது. என் கனவெல்லாம் சிதறி விட்டது என்று பிரபல நடிகை கண்ணீர் மல்க பதிவிட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் வீணா வெங்கடேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்திலும், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் சுப்புலட்சுமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். தற்போது இவரால் அந்த சீரியலில் நடிக்க முடியாமல் போனது. இவருக்கு பதில் இந்த சீரியலில் வேறொரு நடிகைகளை தேர்வு செய்து உள்ளார்கள்.

Kaatrukkenna Veli | 6th to 10th September 2021 - Promo - vijaytv promo -  Vijay Tv Promo | Vijay TV Promo Today | Sun TV Promo

இந்நிலையில் வீணா வெங்கடேஷ் சீரியலில் நடிக்க முடியாமல் போனது குறித்தும், அந்த சீரியலில் வாய்ப்புகள் கிடைக்குமா? என்பது குறித்தும் உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். காற்றுக்கென்ன வேலி சீரியலில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் என்னை பார்த்து இருப்பீர்கள். அதே போல் சித்தி இரண்டாம் பாகத்தில் சுப்புலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் என்னை பார்த்து இருப்பீர்கள். இந்த இரண்டு அற்புதமான கதாபாத்திரங்களை நான் இப்போது இழந்து விட்டேன். அதற்கு காரணம் எனது கொரோனா வந்தது தான். அந்த சமயம் எனக்கு கொரோனா பாசிடிவ் என்று வந்துவிட்டது. இது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

இதையும் பாருங்க : பாக்கியலட்சுமி தொடரில் இன்று(oct-28, epi-360)முழு எபிசோட் இதோ.

- Advertisement -

இருந்தும் உங்களுடைய அன்பும் ஆதரவும் எனக்கு நிறைய கொடுத்தீர்கள். எனக்கு கொரோனா இருக்கும் பொழுது நீங்கள் எல்லாரும் எனக்காக பிரார்த்தனை செய்தீர்கள். மேலும், என்னை மிஸ் பண்ணுவதாக குறிப்பிட்டு பலரும் எனக்கு மெசேஜ் அனுப்பினார்கள். இந்த அன்பை எல்லாம் நான் இப்போது இழந்து விட்டேன். இந்த இரண்டு சீரியல்களும் எனக்கு குடும்பம் போல இருந்தது. எனக்காக அவர்கள் கொஞ்சகாலம் காத்திருந்தார்கள். ஆனால், எனக்கு டெஸ்ட் முடிய இன்னும் இரண்டு நாட்கள் தான் இருந்தது. இந்த இரண்டு நாட்கள் மட்டும் அவர்கள் காத்திருந்தால் நான் சீரியலில் மீண்டும் வந்து இருப்பேன். ஆனால், அவர்களை குற்றம் சொல்லவும் முடியாது. சீரியல்கள் தினமும் ஒளிபரப்பாக வேண்டும் அல்லவா? அதனால் அவர்கள் எனக்கு பதில் வேறு நடிகர்களை மாற்றம் செய்து விட்டார்கள். ஆனால், இந்த இரண்டு கதாபாத்திரங்களும் என்னை மிகவும் கவர்ந்தது. எனக்கு அதன் மீது மிகப்பெரிய பிடிப்பு உண்டு.

அதிலும் சித்தி 2 சீரியலில் நான் நடித்த சுப்புலக்ஷ்மி கதாபாத்திரம் காமெடியாக இருக்கும். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் மீண்டும் தொடர முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது. இவ்வளவு மிகக் குறுகிய காலத்தில் எனக்கு அன்பும் ஆதரவும் கொடுத்தீர்கள். என்னுடைய போறாத காலம் இந்த இரண்டு தொடர்களையும் இழந்து விட்டேன். உங்களை எல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். என் கனவெல்லாம் சிதறிப் போய் விட்டது. என் ஆசையெல்லாம் கைவிட்டுப் போய்விட்டது. திடீரென்று ஒரு அதிசயம் நடந்து இந்த இரண்டு சீரியல்களில் நடிக்க என்னை அழைக்க மாட்டார்களா? என்று என் மனம் ஏங்குகிறது. மீண்டும் நானே நடித்து விட முடியாதா? என்று தோன்றுகிறது. ஆனால், அந்த அதிசயம் நடப்பதெல்லாம் வாய்ப்பு குறைவு. அப்படி நடக்கவில்லை என்றாலும் நிச்சயம் ஒரு புதுபுராஜக்டுடன் புது கதாபாத்திரத்துடன் மறுபடியும் உங்கள் முன்னால் வந்து நிற்பேன் என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement