என்னது பிரியங்கா சோப்ரா Rss ல் இணைந்து விட்டாரா.?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.!

0
584
Priyanka-Chopra
- Advertisement -

பிரபல இந்தி நடிகையான பிரியங்கா சோப்ரா சமீப காலமாக பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பல ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவில் முடி சூடா ராணியாக இருந்து வருகிறார். மிஸ் இந்தியா ஆகியன இவர் பல ஆண்டுகளாக திரையில் கலக்கி வந்தார். மேலும் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று தனது திறமையை நிரூபித்து காட்டியவர்.

-விளம்பரம்-

இந்தி சினிமாவில் சிறிது வாய்ப்புகள் குறையவே சில வருடங்களாக ஹோலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். மாடல் அழகியாக இருந்து பின்னர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. விஜயுடன் ‘தமிழன்’ படத்தில் நடித்த இவர் தன்னை விட வயதில் குறைவான நபரை காதலித்து திருமணம்செய்துகொண்டார்.

இதையும் பாருங்க : வெளியானது தளபதி 63 படத்தின் அப்டேட்.! மகிழ்ச்சியில் திளைக்கும் ரசிகர்கள்.! 

- Advertisement -

அமெரிக்க நடிகர் மற்றும் பாப் பாடகர் நிக் ஜோனஸை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய திருமணம் ஜோத்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. 

சமீபத்தில் பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் இணைந்து நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. அந்த புகைப்படத்தில் பிரியங்கா சோப்ரா காக்கி கலர் அரை டிரௌசரில் இருக்கிறார். இதனை குறிப்பிட்டு ட்விட்டர் வாசி ஒருவர் பிரியங்கா Rss-ல் இணைந்து விட்டதாக கிண்டலடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement