வெளியானது தளபதி 63 படத்தின் அப்டேட்.! மகிழ்ச்சியில் திளைக்கும் ரசிகர்கள்.!

0
360
Vijay-63

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘விஜய் 63 ‘ அப்டேட் ஒன்றை ஏ ஜி எஸ் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுளது. சர்கார் படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் அட்லீ இயக்கியத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையாமாக வைத்து எடுக்கபட்டு வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் யோகி பாபு, இந்துஜா, கதிர், விவேக், ஆனந்த் ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து வீரராகவும், பெண்கள் கால்பந்து ஆட்டத்தின் பயிற்சியாளராகவும் நடித்து வருகிறார். அதே போல இந்த படத்தில் நடிகர் விஜய், அப்பா மற்றும் மகன் ஆகிய இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று சில தகவல்களும் வெளியாகி இருந்தன.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையில், ஒரு வழியாக இந்த படத்தின் அப்டேட்டை படக்குழுவினர். இன்று (ஜூன் 19) வெளியிட்டனர். பர்ஸ்ட் லுக் அல்லது டைட்டில் வெளியாகும் என்று பார்த்தால். அனைவரும் எதிர்பார்த்தது போல படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி ஒரு நாளைக்கு முன்பு அதாவது 21 ஆம் தேதியும். இரண்டாவது போஸ்டர் 22 ஆம் தேதி இரவு 12 மணிக்கும் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.