கமலின் விக்ரம் படத்தில் வெளியான முதல் பாடலில் மத்திய அரசை விமர்சித்து இருப்பதாக கூறி கமல் மீது ஆர்.டி.ஐ செல்வம் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தை இயக்கி இருந்தார். பின் இவர் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி இருந்தார்.

மாஸ்டர் படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருந்தது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் போஸ்டர், First Glance வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

Advertisement

விக்ரம் படத்தின் கதை:

இது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஜெயிலில் இருக்கிறார். அவரை வெளியில் கொண்டு வரும் அசைன்மென்ட் பகத் பாசிலுக்கு கொடுக்கப்படுகிறது. அதனால் அவரும் ஏதோ ஒரு குற்றத்தை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்கிறார். இவர்களின் இந்த தில்லாலங்கடி வேலைகளை தெரிந்து கொண்ட கமல் அவர்களின் முயற்சியை முறியடிக்க பார்க்கிறார்.

விக்ரம் படம் குறித்த தகவல்:

இதனால் கமலும் அதே ஜெயிலுக்கு செல்கிறார். அடுத்தடுத்து நடக்கும் ஆக்ஷன் தான் படத்தின் கதை. மேலும், இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மே 15ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கமல் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்து உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுஎன்னவென்றால், விக்ரம் படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

Advertisement

விக்ரம் படத்தின் முதல் பாடல்:

அதில் கமலின் வரி மற்றும் குரலில் பத்தல பத்தல என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் சென்னை தமிழில் பாடப்பட்டு உள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. ஆனால், அதில் ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னும் இல்ல இப்பாலே..என்று மத்திய அரசை விமர்சிக்கும் வரிகள் பாடலில் இடம்பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் கூறி இருப்பது, கமல் நடித்து விரைவில் வெளியாக உள்ள விக்ரம் என்ற திரைப்படத்தில் வரும் பத்தல பத்தல என்ற பாடல் மத்திய அரசை திருடன் என்று கூறும் வகையில் அமைந்திருக்கிறது.

Advertisement

கமல் மீது எழுந்துள்ள புகார்:

அதில் கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே.. என்ற வரிகள் அமைந்து இருக்கிறது. மேலும், குள்ள நரி மாமு, கெடுப்பதிவன் கேமு… குளம் இருந்தும் வலைதளத்துல ஜாதி பேசும் மீமு… ஊசி போடு மாமே வீங்கிடும் பம்-பே என்று ஜாதி ரீதியான பிரச்சனைகளை தூண்டும் வகையில் இந்த வரிகள் அமைந்திருக்கிறது. ஆகவே உடனே இந்த பாடல் வரிகளை நீக்க வேண்டும். இது குறித்து உடனடி உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜூன் மூன்றாம் தேதி வெளிவரக்கூடிய விக்ரம் படத்திற்கு உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு படத்தை தடை செய்ய மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த புகார் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement