நடிகர் சங்கம் கட்டிடம் தொடர்பாக பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்படுவது குறித்த சர்ச்சை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு என்று ஒரு சங்கம் இருக்கிறது. இது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் நடிகர்களுக்கு என்று சங்கம் இருக்கிறது. மேலும், நடிகர்களுக்கு தலைவர், செயலாளர், பொருளாளர் என பல பதவிகள் கொடுக்கிறார்கள்.

இதற்காக நடிகர் சங்கத்திற்கு என்று வருடம் வருடம் தேர்தல் நடக்கிறது. அதில் பல நடிகர்கள் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்கள். இது ஒரு பக்கமிருக்க, நடிகர் சங்கத்திற்கு என ஒரு சொந்தமாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இது இன்று நேற்று இல்லை பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. ஆனால், இன்று வரை அது நடந்து முடிந்ததா? என்பது கேள்விக்குறி தான். மேலும், இந்த நடிகர் சங்கம் தேர்தலில் ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும் நபர்கள் இந்த முறை நிச்சயம் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும்.

Advertisement

நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு தான் அடுத்த வேலை என்று பல வாக்குறுதிகள் அளிக்கிறார்கள். அதற்கு பின் அவர்கள் அவர்களுடைய சினிமா படங்களில் பிஸியாகி விடுகிறார்கள். அதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷாலும் இந்த நடிகர் சங்கத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்து விட்டு தான் அந்த மண்டபத்தில் திருமணம் செய்து கொள்வேன் என்று சபதம் போட்டார்.

விஷால் செய்த வேலை:

அந்த சபதத்தை நிறைவேற்ற விஷால் கையில் எடுத்த ஆயுதம் தான் செலிபிரிட்டி கிரிக்கெட். நடிகர்களுக்கான நட்சத்திர கிரிக்கெட் போட்டி. இதை விஷால் ஏற்படுத்தி இருந்தார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி விடலாம் என்று நினைத்தார். அவர் கட்டிடம் கனவிலேயே தான் கட்டப்பட்டது. கட்டிடமும் கட்டிய பாடு இல்லை, அவருடைய திருமணமும் நடந்த பாடில்லை. பல வருடங்களாகவே நடிகர் சங்க கட்டிடம் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

Advertisement

நடிகர்கள் கொடுத்த நிதி:

அதோடு ஒவ்வொரு முறையும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு பட்ஜெட் ஒதுக்கும்போதும் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே செலவாகும் என்று கூறப்படுகிறது. தற்போது சூழல் படி நடிகர் சங்க கட்டிடத்திற்காக 40 கோடி ரூபாய் தேவைப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக சங்கத்தில் உள்ள உறுப்பினர்களிடமிருந்தே பணத்தை வாங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் நடிகரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு கோடி ரூபாய் வழங்கியிருக்கிறார். இவரை அடுத்து கமலஹாசன், விஜய் ஆகியோரும் தல ஒரு கோடி ரூபாயை கொடுத்திருந்தார்கள்.

Advertisement

நடிகர் சங்கம் விளக்கம்:

இவர்களை தொடர்ந்து தற்போது நடிகர் நெப்போலியனும் ஒரு கோடி ரூபாயை கொடுத்திருக்கிறார். இதனால் நடிகர் சங்க கட்ட பணிகள் மும்முரமாக நடைபெறுவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள்ளே பணிகள் முடிவடையும் என்றும் பொதுச்செயலாளர் விஷால் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு பொது மக்களிடம் இருந்து பணம் வாங்கலாம் என்று நடிகர் சங்கம் தரப்பில் கேட்டுக் கொண்டதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்து பலருமே கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள். இதை அறிந்த நடிகர் சங்கம், பொதுமக்களிடமிருந்து நடிகர் சங்கம் தரப்பில் எந்த ஒரு நிதியும் வசூலிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் யாரிடமும் பணம் கொடுத்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

Advertisement