விவேகம் படம் தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என்று ஒளிப்பதிவாளர் வெற்றி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அஜீத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் அஜித்தின் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் ஒன்று தான் விவேகம்.
இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கி இருந்தார். இந்த படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை சத்தியஜோதி நிறுவனம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் இந்த படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை.
விவேகம் படம்:
மேலும், இந்த படத்தினுடைய தோல்வியால் தான் அஜித் மீண்டும் அதே தயாரிப்பு நிறுவனத்திற்காக விஸ்வாசம் என்ற படத்தில் நடித்து தந்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றுத் தந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் விவேகம் படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒளிப்பதிவாளர் வெற்றி, ஒவ்வொரு படத்துக்குமே ஒவ்வொரு பிரச்சனை வரும்.
ஒளிப்பதிவாளர் வெற்றி பேட்டி:
அந்த மாதிரி விவேகம் படத்தை பொறுத்தவரை வெளியீட்டு தேதியை முன்னதாக அறிவித்திருந்தார்கள். இன்னும் ரெண்டு மாதம் கொடுத்திருந்தால் வீரம், வேதாளம் போன்ற பெரிய படமாக விவேகம் மாறி இருக்கும். கிராபிக்ஸ் காட்சிகளுக்கும் இன்னும் கொஞ்சம் நேரம் கொடுத்திருக்கலாம். ஆனால், படத்தினுடைய வெளியிட்டு தேதியை மாற்றி இருந்தால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய பிரச்சனை வரும். அதை வைத்து தான் பைனான்ஸ் விஷயங்கள் உட்பட எல்லாமே இருக்கும்.
தோல்விக்கு காரணம்:
அதனால் தான் சீக்கிரமாகவே படப்பிடிப்பை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேதாளம் படத்தினை ஆறு மாதத்திலேயே படப்பிடிப்பு எல்லாம் முடித்து வெளியிட்டோம். விவேகம் படத்துக்கு கிராபிக்ஸ் காட்சிகளுக்கு கூட நேரம் பத்தவில்லை. படத்தினுடைய பிரிவியூ பார்க்க கூட நேரமில்லை. நேரம் இருந்திருந்தால் சில விஷயங்கள் சரி செய்திருக்கலாம். ஆனால், அதற்கான சூழ்நிலை அமையவில்லை. அதனால் தான் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்று கூறியிருக்கிறார்.
அஜித் நடிக்கும் படங்கள்:
கடைசியாக அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற படத்தில் நடித்து இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து விட்டது. தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ஆரவ், உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் சென்று கொண்டு இருக்கிறது. இதை அடுத்து அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.