குருதிப்புனல் படத்தில் வந்த இவர் யார் தெரியுமா ? அஜித்தின் இந்த படத்தில் கூட நடிச்சிருக்கார்.

0
28080
kurithi

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அரவிந்த் கிருஷ்ணா. இவர் திரைப்பட ஒளிப்பதிவாளர் மட்டுமில்லாமல் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் ஒளிப்பதிவாளராக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து இவர் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, குசேலன், வாமனன், கணிதன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் பணிபுரிந்திருக்கிறார்.

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகராக தான் நுழைந்தார். இவர் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இவர் அஜித், அர்ஜுன், விஷால் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். 1995 ஆம் ஆண்டு பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் வெளிவந்த குருதிப்புனல் என்ற படத்தில் தான் அரவிந்த் கிருஷ்ணா நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த படத்தில் கமலஹாசன், அர்ஜுன், கௌதமி, நாசர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய அளவில் இந்த படம் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் 2000 ஆண்டு வெளிவந்த பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் தபு, ஐஸ்வர்யாராய், மம்மூட்டி, அஜித், அப்பாஸ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

தீராத விளையாட்டு பிள்ளை

இதனை தொடர்ந்து இவர் 2008 இல் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் என்ற படத்தில் நடித்திருந்தார். பின் 2010 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி இவர் நடித்த படங்களின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளிவந்தது. இதை பார்த்து பலரும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவா இது!! என்று வியக்கும் அளவிற்கு கேட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement