சென்னையில் புதிய வீடு கட்டி குடியேறிய மாரி செல்வராஜ் – நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள், யார்னு சொல்லவா வேணும் ?

0
372
mari
- Advertisement -

புது வீடு கட்டி குடியேறிய இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை வாழ்த்து சொல்லியிருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். ஆரம்பத்தில் இவர் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் தான் சினிமாவுக்குள் வந்தார். அதன் பின்னர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். மேலும், ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் கூட மாரி செல்வராஜ் ஒரு சிறு காட்சியில் நடித்து இருப்பார்.

-விளம்பரம்-

பின் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு போன்ற பல்வேறு பரிட்சயமான நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’.

- Advertisement -

கர்ணன் படம் பற்றிய தகவல்:

இந்த படத்தில் ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. 1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன.

கர்ணன் படம் உருவான விதம்:

இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகிய படம் தான் ‘கர்ணன்’. இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்தில் சென்னையில் தான் கட்டி இருக்கும் புதிய இல்லத்திற்கு குடும்பத்துடன் குடியேறி உள்ளார். தன்னுடைய குருநாதரான இயக்குனர் ராம் அவர்களின் ஆசீர்வாதத்தோடு இந்த புதுமனை புகுவிழா நடந்தது.

-விளம்பரம்-

புது வீடு கட்டியுள்ள மாரி செல்வராஜ்:

மேலும், இந்த நிகழ்வில் இயக்குனர் ரஞ்சித், தயாரிப்பாளர் தாணு மற்றும் திரையுலகைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றிருந்தனர். மேலும், இவர்களோடு இயக்குனர் மாரியின் மூன்றாவது படம் தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களும் மாரி செல்வராஜ் இல்லத்திற்கு வந்து இருந்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு இயக்குனர் மாரி செல்வராஜின் மகள் பூக்கொடுத்து வரவேற்றார். பின் உதயநிதி ஸ்டாலினும் மாரி செல்வராஜ்க்கு பூச்செண்டு மற்றும் பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

மாரி செல்வராஜுக்கு வாழ்த்து சொல்லிய பிரபலங்கள்:

இவர்களுடன் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வினியோக நிர்வாகி ராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். அதுமட்டும் இல்லாமல் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் புதுமனை புகுவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள்,பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இரண்டே படத்தில் இவ்வளவு பெரிய வீடா! என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement