அஜித் குறித்து சிட்டிசன் மணி அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி படங்கள் நடித்து பின் இயக்குனராக அவதாரம் எடுத்திருப்பவர் மணி. இவரை பலரும் சிட்டிசன் மணி என்று தான் அழைப்பார்கள். காரணம், இவர் அஜித்தின் சிட்டிசன் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் அஜித், விஜய், ரஜினி, சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படி நடிகராக இருந்த சிட்டிசன் மணி தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

இவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பெருநாளி. இவர் 20 நாட்களிலேயே மொத்த படத்தின் படப்பிடிப்பை எடுத்து முடித்திருக்கிறார். இந்த படம் தாய்மாமன் – மருமகள் செண்டிமெண்ட்டை கொண்ட படம். மேலும், சுமார் 30 ஆண்டுகளாக இவர் சினிமா துறையில் பணியாற்றி இருக்கிறார். அதில் கிடைத்த அனுபவங்களை வைத்து தான் இவர் இந்த படத்தை குறுகிய காலத்தில் முடித்திருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த படத்தின் பாடல்களை கூடிய விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. அதற்கான பணிகளில் படக்குழு மும்முரமாக இறங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் சிட்டிசன் மணி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரை அனுபவம் குறித்தும், அஜித் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Advertisement

சிட்டிசன் மணி அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருப்பது, நான் சிறு வயதிலேயே ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு சென்னைக்கு ஓடி வந்து விட்டேன். நானும், என் மச்சானும் சென்னைக்கு வேலைக்காக வந்தோம். அவர் வேலை கிடைத்து சென்று விட்டார். அவர்தான் என்னை ஒரு டீக்கடையில் வேலைக்கு சேர்த்து விட்டார். அந்த டீ கடையில் டம்ளர் கழுவ சொன்னார்கள். நானும் அந்த டம்ளரை கழுவினேன். ஆனால், இரண்டு நாட்களாக சாப்பிடாத பசி மயக்கம் என்பதால் என்னால் வேலை செய்ய முடியவில்லை. கண்ணெல்லாம் மயங்கி கீழே விழ போனேன். அப்போது அந்த ஓனர் என்னை கூப்பிட்டு என்னவென்று கேட்கும் போது இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை. சாப்பாடு கொடுங்கள் என்று கேட்டேன். அவரு உடனே பரிதாபப்பட்டு எனக்கு சாப்பிட கொடுத்தார். அந்த சாப்பாடு சாப்பிடும் போது விக்கல் வந்தது. இருந்தும் என்னால் பசியை அடக்க முடியாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

சினிமா வாய்ப்பு:

அப்போதுதான் பசி என்றால் என்ன என்பதை உணர்ந்தேன். அப்படியே அந்த கடையில் வேலை செய்து கொண்டு சினிமா துறையில் ஆபீஸ் பாயாக வேலை செய்யும் நபர்களிடம் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு சாப்பாடு, டி வாங்கி வருவது என்று எடுபுடி வேலைகளை செய்திருந்தேன். அப்படித்தான் சினிமா துறையில் சில நபர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்களின் மூலமாக நாடகங்களில் சேர்ந்தேன். அப்படியே படிப்படியாக படங்களில் வாய்ப்பு கேட்டு அலைந்தேன். பல அவமானங்களை சந்தித்து தான் சினிமா துறையில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சாப்பாடு, தூங்க இடமில்லாமல் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறேன். சிட்டிசன் படத்தில் அஜித் அண்ணா உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. என் வாழ்க்கையில் கிடைத்த பாக்கியம். ஒரு டயலாக் வரும் அதை அஜித் அண்ணா சொல்லிக் காண்பிக்க சொன்னார்.

Advertisement

அஜித்துடன் பட அனுபவம்:

நான் உடனே சொன்னேன். பின் அவரை என்னை பார்த்துவிட்டு எதற்கு இந்த அழுக்கான தொப்பி போட்டு இருக்கிறீர்கள். அவருக்கு சரியான உடை கொடுங்கள் என்று கூறினார். எனக்கான சரியான ஆடை கொடுத்து அந்த டயலாக்கை ஒரே டேக்கில் எடுத்தோம். பின் அவர், நீங்கள் இங்கே சேர் போட்டு உட்கார்ந்திருங்கள். உங்களுக்கு நாலஞ்சு சீன் வரும் என்று சொன்னார். அதேபோல் நானும் நடித்துக் கொடுத்தேன். அப்படியே அஜித் அண்ணாவுடைய பழக்கம் ஏற்பட்டது. சிட்டிசன் படத்திற்கு முன்பே தொடரும் படத்திலேயே அஜித் அண்ணாவை எனக்கு நன்றாகவே தெரியும். அஜித் அண்ணா மாதிரி ஒரு நல்ல மனிதரை நான் பார்த்ததே கிடையாது. பலரும் அவர் நல்லவரா? கெட்டவரா? என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். அதற்கான ஒரு உதாரணத்தை தான் நான் சொல்கிறேன்.

Advertisement

அஜித் குறித்து சொன்னது:

ஒருமுறை படத்தின் சூட்டிங் இரவு நேரம். ஒருவர் குழந்தையோடு அஜித் அண்ணாவை சந்திக்க காத்துக் கொண்டிருந்தார். பின் அஜித் அண்ணா வந்த உடனே குழந்தையை காலில் போட்டு விழுந்தார். உடனே குழந்தை தூக்குங்கள் தூக்கங்கள் குழந்தை எல்லாம் காலில் போடக்கூடாது என்று அஜித்த அண்ணா சொன்னார். அஜித் அண்ணாவிடம் குழந்தைக்கு மண்டையில் இருக்கும் பிரச்சனையை கூறி மருத்துவ ரிப்போட்டை கொடுத்தார். உடனே அஜித் அண்ணா மருத்துவமனைக்கு போன் செய்து குழந்தைக்கு தேவையான மொத்த செலவையும் நான் செய்கிறேன் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யுங்கள் என்று சொன்னார். இது பலருக்குமே தெரியாது. இப்படி அஜித் அண்ணா மறைமுகமாக பல உதவிகளை செய்திருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.

Advertisement