அமரன் படத்தை பார்த்துவிட்டு முதல்வர் கொடுத்த விமர்சனம் – நெகிழ்ச்சியுடன் சொன்ன SK

0
278
- Advertisement -

அமரன் படத்தைப் பார்த்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சொல்லி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த ‘அயலான்’ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதைத்தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. மேலும், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.

- Advertisement -

அமரன் படம்:

ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி போன்ற பல மொழிகளில் வெளியிட தயாராக உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று அனைவரும் எதிர்பார்த்த அமரன் படம் வெளியாகி இருக்கிறது. மேலும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அமரன் திரைப்படத்தை சிறப்பு திரையில் போடப்பட்டிருக்கிறது.

படம் பார்த்த முதல்வர்:

இந்த படத்தை முதல்வர் ஸ்டாலின் உடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, படத்தினுடைய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜிவி பிரகாஷ் ஆகியோரும் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். படத்தை பார்த்து முடித்து மு.க ஸ்டாலின் பட குழுவினரை பாராட்டி வாழ்த்தும் தெரிவித்து இருக்கிறாள்.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் பேட்டி:

இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன், நேரம் ஒதுக்கி படம் பார்த்த மாண்புமிகு முதல்வர்கள் அவர்களுக்கு நன்றி. படத்தை பார்த்ததும் ‘ரொம்ப எமோஷனலா இருந்தது. ஒரு நல்ல படத்தை எல்லாரும் சேர்ந்து கொடுத்து இருக்கீங்க’ன்னு சொல்லி, என்ன, இயக்குனர, சாய் பல்லவிய, ஜி.விய எல்லாரையும் வாழ்த்துனாங்க. டெபுட்டி CM உதய் சாரும் வந்து இருந்தாங்க.

முதல்வர் சொன்ன விஷயம்:

அவரும் ரொம்ப நல்லா இருக்கு, எல்லாரும் நல்லா பண்ணி இருக்கீங்கன்னு சொன்னாங்க. நம்ம ஊர்ல இருந்து ஒரு ராணுவ வீரர் ஒரு பெரிய சாதனைய படைச்சி இருக்காரு. அவருக்கு ஒரு TRIBUTEஆ அமைஞ்சதால தான் நேரம் ஒதுக்கி இந்த படத்தை பார்த்தாங்க. அதேபோல் நீங்க எல்லோரும் பார்த்து படத்தை பற்றி என்ன சொல்ல இருக்கீங்க என்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று ரொம்ப நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

Advertisement