தமிழில் பேசுவதால் ஹிந்தி பிக் பாஸில் ஸ்ருத்திகாவுக்கு ஏற்படும் அவமானங்கள்- அவரே சொன்ன வீடியோ இதோ

0
413
- Advertisement -

நடிகை ஸ்ருத்திகாவுக்கு ஹிந்தி பிக் பாஸில் ஏற்படும் கொடுமைகள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஒளிபரப்பப்படும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சியை ஹிந்தியில் தான் முதன் முதலாக ஒளிபரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது. இம்முறை இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். அதேபோல் சமீபத்தில் ஹிந்தி பிக் பாஸ் 18 தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் சல்மான் கான் தான் தொகுத்து வழங்குகிறார். இந்த முறை நடிகை ஸ்ருத்திகா ஹிந்தி பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ‘ஸ்ரீ’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

- Advertisement -

ஸ்ருத்திகா குறித்து:

அதற்குப் பிறகு இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு சினிமாவில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதற்குப் பிறகு இவர் தனியாக youtube சேனலை தொடங்கி இருக்கிறார். அதில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இவரை பாலோ செய்கிறார்கள்.

பிக் பாஸில் ஸ்ருத்திகா:

தற்போது ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் ஹிந்தியில் கலந்து கொள்ளும் முதல் தமிழ் பெண் என்ற பெருமையை ஸ்ருத்திகா பெற்றிருக்கிறார். இவரின் அடையாளமே வெகுளியான பேச்சும் குறும்புத்தனமும் தான். அதனால் முதல் நாளே இவர் தன்னுடைய சேட்டைகளால் சல்மான் கானை கவர்ந்தார். சமீபத்தில் கூட, ‘சும்மா’ என்ற தமிழ் வார்த்தையை ஹிந்தி பிக் பாஸில் பேசி, யார் இந்த ஸ்ருத்திகா என ஹிந்தி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யும் அளவுக்கு இவர் மாறியுள்ளார்.

-விளம்பரம்-

ஸ்ருத்திகாவுக்கு ஏற்படும் கொடுமைகள்:

மேலும், ஹிந்தி பிக் பாஸில் இருந்தாலும் தன்னை மீறி ஸ்ருத்திகா ஒரு சில சமயங்களில் தமிழில் பேசி விடுகிறார். அதற்கு அவர் அனைவரிடமும் மன்னிப்பும் கேட்கிறார். அதேபோல் அங்குள்ள போட்டியாளர்கள் சிலருக்கு அவர் தமிழும் கற்றுக் கொடுத்து வருகிறார். ஆனால், ஸ்ருத்திகா தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சிலர் அவரை பற்றி தவறாக முதுகுக்கு பின்னால் பேசி வருகிறார்கள். அதோடு ஸ்ருத்திகா தொடர்ந்து ஹிந்தியில் பேசினாலும், அவர் பேசும் விதத்தில் தமிழ் ஸ்லாங் வந்துவிடுகிறது.

ஸ்ருத்திகா கணவரின் எமோஷனல் பதிவு:

இதனால் அங்குள்ள சிலர் அதை வைத்து அவரை கிண்டல் செய்கிறார்களாம். இவையெல்லாம் பார்க்கும் போது ஸ்ருத்திகாவிற்கு வருத்தமாக இருக்கிறது என அவரேக் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோவை ஸ்ருத்திகாவின் சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்து, ஸ்ருத்திகா நிமிர்ந்து நிற்கிறார். அவளுடைய தமிழ் வேர்கள் அவளுடைய பலம், அவளுடைய வரம்புகள் அல்ல. உண்மையான சக்தியும் வலிமையும் நீங்கள் இருக்கும் நபரை சொந்தம் ஆக்குவதில் உள்ளது. அவள் நிச்சயமாக நம் அனைவரையும் பெருமைப்படுத்துகிறாள் என்று பதிவிட்டுள்ளார்கள்.

Advertisement