தளபதி 65 இயக்குனர் நான் இல்ல. ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த இயக்குனர்.

0
21560
vijay 65

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார்.

Image result for vijay 65

- Advertisement -

இந்நிலையில் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு தான் ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. இந்த விழாவில் மாஸ்டர் படக்குழுவினர் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். ஆனால், ரசிகர்களால் மட்டும் தான் கலந்து கொள்ள முடியாமல் போனது. மேலும், இப்படத்தின் டிரைலர் இந்த மாதம் 22 ஆம் தேதி வெளி வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : ஆல்யாவிற்கு பிறக்கபோவது ஆணா, பொண்ணான்னு அதுக்குள்ள தெரிஞ்சிக்கிட்டாங்களா ? நீங்களே இத பாருங்க.

-விளம்பரம்-

இந்த படம் ஏப்ரல் மாதம் திரையரங்கிற்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் விஜய்யின் 65 வது படத்தை கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க உள்ளதாகவும் விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவேற்றி உள்ளார் ரசிகர் ஒருவர். இது உண்மையா? இல்லையா? என்று பலரும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த நிலையில் இதற்கு அஜய் ஞானமுத்து அவர்கள் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர் கூறியது, ‘இது யார் பார்த்த வேலை என்று தெரியலையே’ என கமெண்ட் அடித்திருக்கிறார். இதன் மூலம் அஜய் ஞானமுத்து விஜய்யின் 65 வது படத்தை இயக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. தற்போது தளபதி 65 படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் சுதா கொங்கரா பெற்றுள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சுதா கொங்கரா. மேலும், சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று படத்தை பார்த்த பின்பு தான் விஜய் புன்னகை முகத்துடன் ஓகே என்று சொன்னார்.

Image result for ajay gnanamuthu

சூரரைப்போற்று படத்தில் இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ் தான் தளபதி 65 படத்தில் இசையமைப்பாளராக இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய், சுதா, ஜிவி பிரகாஷ் ஆகிய மூவரையும் தளபதி 65 படத்திற்கு அட்வான்ஸ் புக்கிங் செய்து வைத்து உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள்.

Advertisement