திருமணம் சீரியலுக்கு எண்டு கார்ட் போட்ட கலர்ஸ் தமிழ் – இந்த தேதியோடு நிறைவு. ரசிகர்கள் சோகம்.

0
1458
thirumanam

தொலைக் காட்சிகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு சீரியல் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றனர் ஆனால் ஒருசில சீரியல் மட்டும் தான் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் திருமணம் சீரியல் பல்வேறு ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். இந்த தொடரின் நாயகனாக சிந்துவும் நாயகியாக ஸ்ரேயாவும் அறிமுகமானார்கள். இந்தத் தொடரில் நடித்து வரும் சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் நிஜத்திலும் காதலித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் நாயகனாக வரும் சித்து டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் தான் பிரபலமானார். அதன் மூலம் தான் இவருக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் திருமணம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகர் சித்து நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார்.

- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த சீரியல் 600 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த சீரியல் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த வாரத்துடன் திருமணம் தொடர் நிறைவடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக கலர்ஸ் தொலைக்காட்சி தனது அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில், திருமணம் சீரியலுக்கு நேயர்கள் அளித்த அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என்று குறிப்பிட்டு, 16/10/2020 அன்றோடு திருமணம் சீரியல் நிறைவடைய இருப்பதாக கூறியுள்ளனர்.

தொடரில் நடித்து வந்த சித்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் துவங்கியுள்ள ராஜா ராணி தொடரில் ஆலியா மானசா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ராஜா ராணி தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இந்த தொடருக்கும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் இந்த தொடர் ஏற்கனவே இந்தியில் வெளியான ‘Diya Aur Baati Hum ‘ என்ற தொடரின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரை என் கணவன் என் தோழன் என்று விஜய் தொலைக்காட்சியை டப்பிங் செய்து ஒளிபரப்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement