சேஷு, டேனியல் பாலாஜியை தொடர்ந்து காலமான மேலும் ஒரு காமெடி நடிகர் – என்ன ஆண்டோ

0
487
- Advertisement -

சேசு, டேனியல் பாலாஜியை தொடர்ந்து காமெடி நடிகர் மாரடைப்பால் இறந்திருக்கும் சம்பவம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப காலமாக சினிமா துறைகளில் பிரபலங்கள் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தான் பிரபல காமெடி நடிகர் சேஷு மாரடைப்பு காரணமாக இறந்தார். இவர் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சினிமாவில் நுழைந்தார்.

-விளம்பரம்-

இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார். சமீப காலமாக இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில் இறந்துவிட்டார். இவருடைய இறப்பு பலருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. இவரை அடுத்து நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக காலமாகி இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர் டேனியல் பாலாஜி.

- Advertisement -

இவர் படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து இருக்கிறார். இவர் மறைந்த நடிகர் முரளியின் தம்பி என்பது குறிப்பித்தக்கது. மேலும், இவர் வேட்டையாடு என்பது பொல்லாதவன், வட சென்னை போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து உள்ளார். பெரும்பாலும் இவர் வில்லன் ரோலில் மிரட்டி வந்தார். வில்லன் ரோல் இவருக்கு பொருத்தமாக அமைந்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது. இறுதியாக மித்ரன் ஜவஹர் இயக்கிய அரியான் என்ற படத்தில் டேனியல் இயக்கிய நடித்து இருந்தார்.

பின் கடந்த 2021ஆம் ஆண்டு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் சில நாட்களில் இவர் குணமாகி வீடு திரும்பினார். இருந்தாலும், டேனியல் பாலாஜிக்கு சில வாரங்களுக்கு முன் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்து விட்டார். இந்த சோகமே மக்கள் மத்தியில் மறையும் முன்பே பிரபல நடிகர் அருள்மணி இறந்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

நடிகர் அருள்மணி குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்தவர் அருள்மணி. இவர் வேல், அழகி, தென்றல் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இவர் காமெடி மட்டும் இல்லாமல் வில்லன் ரோலிலும் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ஆவார். இந்த நிலையில் தற்போது மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் அருள்மணி தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

அருள்மணி இறப்பு:

அப்போது திடீரென்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக இவரை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்திருந்தார்கள். இருந்தாலுமே, சிகிச்சை பலனின்றி அருள்மணி இறந்து இருக்கிறார். தற்போது அவருக்கு 65 வயது தான் ஆகிறது. இவருடைய மறைவு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவரின் மறைவிற்கு அதிமுக தொண்டர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமை இரங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement