இலங்கை போரில் குடும்பத்தினர் 8 பேரை இழந்து, தனது காலில் குண்டடி. ஈழத்தமிழர் போண்டா மணியின் சோகமான பக்கம்.

0
14049
bonda-mani
- Advertisement -

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் போண்டா மணி. இவர் 190க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். இவருடைய உண்மையான பெயர் கேதீஸ்வரன். இவருடைய சொந்த ஊர் இலங்கையில் உள்ள மன்னார் பகுதி. அங்கு இவர் மறுமலர்ச்சி விநாயகர் கலா மன்றம் என்ற ஒன்றை தன்னுடைய நண்பர்களுடன் நடத்தி வருகிறார். நடிகர் போண்டாமணி அவர்கள் ஒரு இலங்கை தமிழர். இவர் இவர் வைகை புயல் வடிவேல் உடன் இணைந்து நிறைய படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் நடிகனாக ஆக வேண்டும் என்ற விடாமுயற்சியால் இலங்கையில் இருந்து அகதியாக ராமேஸ்வரம் வந்தார். இவர் சமிபத்தில் ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் இவருடைய வாழ்க்கை குறித்தும், திரை உலகை குறித்தும் பேசி உள்ளார். அதில் அவர் கூறியது,

-விளம்பரம்-
Image result for bonda mani

- Advertisement -

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இலங்கையில தான். பத்தாவது வரை நான் தான் படிச்சிருக்கேன். அதுக்கு பின்னாடி நான் நாடகக் கலையில நடிக்க ஆரம்பிச்சுட்டேன். எனக்கு எப்படியாவது தமிழ் சினிமாவில நடிக்கணும்ன்னு ஆசை. அதனால 1979இல் ஒருத்தன் இந்தியாவுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி என்ன சிங்கப்பூருக்கு அனுப்பி வசிட்டன். அங்கு ஒரு மூணு வருஷம் நான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து இருந்தேன். அங்க தான் நான் பாக்யராஜ் சாரைப் பார்த்தேன். அவர் கிட்ட தமிழ் சினிமாவுல நடிக்கிறத பத்தி பேசனேன். ஆனா, அவர் இந்தியாவுக்கு வா பாத்துக்கலாம் அப்படின்னு சொன்னாரு. அப்புறம் நான் உடனே இலங்கைக்குப் போனன். அப்புறம் 1983ல் அரபிகளோடு சேர்ந்து தான் நான் இந்தியாவுக்கு வந்தேன்.

அப்புறம் சினிமா வாய்ப்புக்காக எவ்வளவோ போராடினேன். ஆனா எல்லா முயற்சியும் வீணா தான் போச்சி. எதுவும் கிடைக்கலன்னு அப்புறம் வேற வழி இல்லாம நான் மீண்டும் திரும்பி இலங்கைக்குப் போயிட்டேன். நானும், எங்க அண்ணன், எங்க அப்பா நாங்க மூணு பெரும் சேர்ந்து ஒரு கடையை போட்டு வந்தோம். அப்ப இலங்கையில் நடந்த ஒரு பயங்கர பிரச்சனை நடந்துச்சி. அதுல எனக்கு கால்ல ரொம்ப அடி பட்டுருச்சு. அதோடு என் கூட பொறந்தவங்க மொத்தம் 16 பேர். இலங்கை பிரச்சனையில 8 பேர் இறந்துட்டாங்க. அப்ப தான் நாங்க அகதிகளாக இராமேஸ்வரத்துக்கு கூட்டிட்டு வந்தாங்க. அதுக்கு பின்னாடி நான் எங்கெங்கேயோ அலைஞ்சி திரிஞ்சி கஷ்டப்பட்டேன். அப்புறம் தான் நான் சேலம் போனேன். அங்கு தான் நான் இயக்குனர் பாக்யராஜ் பார்த்தேன்.

-விளம்பரம்-
Related image

அதோடு ஒரு லட்சியவாதி ஜெயிக்கணும்னா வெட்கம், மானம், சூடு, சொரணன்னு எல்லாத்தையும் விட்டா தான் இந்தியாவில ஜெயிக்க முடியும் என்பதை நான் உணர்ந்தேன். அதுக்கு பின்னாடி தான் பாக்கியராஜ் சார் எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். நான் இலங்கை தமிழன் என்பதால் தான் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தாங்க. நான் டெய்லியும் காலைல ஒரு டீ, போண்டா மட்டும் தான் சாப்பிடுவேன். அதுவும் என் மேல இறக்கப்பட்டு தருவாங்க. ஒரு டைரக்டர் சார் என்ன கூப்பிட்டு நீ நிறைய போண்டா சாப்பிற்றதானாலே உன்னுடைய பெயர் “போண்டாமணி” வெச்சாரு. இன்னிக்கு எல்லாம் சினிமாவுல இந்த மாதிரி சாப்பாடு, ஊர்ப் பெயர்கள வெக்கிறவங்க தான் சீக்கிரம் பிரபலம் ஆயிட்ராங்கன்னு சொன்னாரு. அதன்படி நானும் என் பெயர போண்டாமணி வச்சிக்குட்டேன்.

நான் நடிக்கப் போன காலத்துல காமெடி நடிகர்களாக கொடிகட்டிப் பறந்தவங்க கவுண்டமணி, செந்தில் தான். எனக்கு 40 நாள் படத்தில் நடிக்க கவுண்டமணி சார் உடன் வாய்ப்பு கிடைத்தது. அதோடு அவர் என்னை போண்டாமணின்னு கூப்டு கூப்டு தான் இந்த அளவிற்கு நான் பிரபலமானேன். நான் இலங்கையிலிருந்து வந்தன்னு சொன்னவுடனே ஆரம்பத்தில் பல பேர் எவ்வளவு கேவலமா பேசி, உனக்கு என்ன தெரியும் நடிப்ப பற்றின்னு எவ்வளவோ என்னை அசிங்க படுத்தி இருக்கிறாங்கா. நான் இப்ப சாய் கலைக்கூடம் என்ற ஒன்றை நடத்தி வருகிறேன். ஆரம்பத்தில எனக்கு பொண்ணு கூட தர மறுத்தாங்க. அப்புறம் தான் நான் ஒரு கன்னட பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்னுடைய மனைவி மாதவி. எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு இருக்காங்க.

Image result for bonda mani

அதைவிட இந்த உலகம் முழுவதும் பேசப்படும் சூப்பர் ஸ்டாரே எனக்கு போண்டாமணி காமெடி தான் ரொம்ப பிடிக்கும்னு சொன்னாரு. எனக்கு இதை விட வாழ்க்கையில வேற என்ன வேணும். இதுவே நான் சினிமாவுல ஜெயிச்ச மாதிரி தான். இப்ப நா தனுஷ் ,விஜய் சேதுபதி உடன் சேர்ந்து நடிச்சு இருக்கேன். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்ப தான் எனக்கு சினிமா துறையில் பட வாய்ப்புகள் கொடுத்துட்டு வராங்க. இது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு என்று கூறினார்.

Advertisement