கவுண்டமணி செந்தில் கம்போ காமெடிகளுக்கு இணையாக 80ஸ் காலகட்டத்தில் சோலோவாக கலக்கிய ஜனகராஜ் என்ன ஆனார் ?

0
1369
janagaraj
- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களாக திகழ்ந்து வந்த செந்தில் கவுண்டமணி காம்பினேஷன் இருந்த போது பெரும்பாலான படங்களில் இவர்களின் காமெடிகள் தான் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானது ஆனால் எந்த ஜாம்பவான்களுக்கு மத்தியில் பல காமெடியன்கள் தங்களின் தனிப்பட்ட திறமை மூலம் தனி காமெடி நடிகர்களாக கலக்கிக்கினர். அந்த வகையில் செந்தில் கவுண்டமணி காம்போவாக கலக்கி கொண்டிருந்த காலகட்டத்தில் தனியாக காமெடியில் அசத்தியவர் ஜனகராஜ். காமெடி நடிகராக மட்டுமல்லாது மற்றொரு புறம் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்து வந்த இவர் 80 மற்றும் 90களில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய காமெடியன் ஜனாகராஜ் தான்.

-விளம்பரம்-

ஒரு பக்கம் கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணை சிமிட்டிக்கொண்டு பேசியே அனைவரையும் மயக்கி விடுவார். இவருக்கு எப்படி நடிக்க வாய்ப்பு கிடைத்தது தெரியுமா. ஜனகராஜின் வீடு சென்னையில் ஒரு முக்கியமான மெயின் ரோட்டில் பெரிய வீடாக இருந்தது. பல சினிமா பிரபலங்கள் ஜனாகராஜ் வீட்டில் தான் வாடகைக்கு தங்கி இருந்தார்கள். அப்படி மலேசியா வாசுதேவனும் அவர் வீட்டில் தங்கி இருந்தார்.

- Advertisement -

பாரதிராஜா கொடுத்த வாய்ப்பு :

அவரை பார்க்க ஜாம்பவான்கள் பாரதிராஜா போன்றோர் வருவர். அந்த சமயத்தில் எல்லாம் அவர்களுடன் சரிக்கு சமமாக அமர்ந்து பேசினேன் எனக் கூறி சிரிக்கிறார் ஜனாகராஜ். அதேபோல், ஒரு சமயத்தில் பாரதிராஜ் ஒரு நாடகம் எழுதி வைத்திருந்தார். அவருக்கு என்னை ரொம்ப பிடித்துப்போக அதில் என்னை ஹீரோவாக நடிக்கவும் சொன்னார். அப்போ நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன், இதனால் அந்த நாடகத்தில் ஹீரோவாக நடிக்க முடியவில்லை.

முதல் படம் :

ஆனால், அதில் எனக்கு எலும்பு கோபால் என்ற ஒரு கேரக்டரில் நடித்தேன். அந்த கேரக்டர் அனைவருக்கும் ரொம்ப பிடித்துவிட்டது.அதன் பின்னர் மூன்று நாடகத்தில் நடித்தேன், 1978ல் பாரதிராஜா என்னை கொண்டு வந்து கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து படங்கள் வந்தது. ஆனால் எப்படி காமெடியன் ஆனேன் என்று எனக்கே தெரியவில்லை.

-விளம்பரம்-

சிறந்த குணச்சித்திர நடிகர் :

ஜனகராஜ் தமிழில் மட்டும் 200+ படங்கள் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் சில படங்கள் நடித்துள்ளார். நவரச நாயகன் கார்த்திக் நடித்து 1990ல் வெளிவந்த படம் கிழக்கு வாசல், இந்த படத்தில் ஜனகராஜுக்கு சாட்டையை உடம்பில் அடித்துக்கொண்டு வாழ்க்கையில் பிழைக்கும் கேரக்டர். அதில் உண்மையாகவே சாட்டையை வருது உடம்பில் அடித்தால் வடுவாக மாறிவிட்டது. எனக் கூறினார் ஜனகராஜ்.

janagaraj

ரஜினி கமல் என இரண்டு பேரும் ஹீரோக்களுடனும் நடித்துவிட்டேன். இருவருமே அற்புதமான மனிதர்கள். மணிரத்னம் இயக்கிய அக்கினி நட்சத்திரம் படத்துல, ‘என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா’ என்று கூறும் டயலாக் இன்னும் பிரபலம் தான்.
இது குறித்து மீம்ஸ் எல்லாம் வருகிறது, அதனை எல்லாம் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாகி உள்ளது. எனக் கூறினார் ஜனகராஜ். தற்போது அவரை எந்த ஒரு படங்களிலும் பார்க்க முடிவதில்லை.

ஜனகராஜ் ரீ என்ட்ரி :

ஆனால், 6 மாதமாக விஜய் ஸ்ரீஹரி என்ற ஒரு புது இயக்குனர் இவரிடம் துரத்தி துரத்தி கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார். அந்த படம் தான் கமலஹாசன் அண்ணன் சாருஹாசன் நடித்த தாதா 87. அந்த படத்தில் நடித்த ஜனகராஜ் இனி என்ன ஆனாலும் சரி படத்தில் நடித்துவிட்டு வேண்டியது தான் எனக் கூறி அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிட்டார். ஆனால், அந்த படத்திற்கு பின் ஜனகராஜை எந்த படத்திலும் காண முடிவதில்லை. இப்படி ஒரு நிலையில் ஜனகராஜின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

Advertisement