-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

6 ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் தவிப்பு, பிரபல காமெடி நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா ?

0
2083
karuppu subbiah

தமிழ் சினிமாவில் நாம் பார்த்து ரசித்த எத்தனையோ நடிகர் நடிகைகள் பின் நாளில் என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் போய்விடுகிறது. அதிலும் குறிப்பாக 80,90 காலகட்டத்தில் நடித்த பல பிரபலமான நடிகர்கள் என்ன ஆனார்கள் என்பதே பலருக்கும் தெரியாது. அந்த வகையில் பல கவுண்டமணி காமெடியில் கலக்கிய கருப்பு சுப்பையா என்ன ஆனார் என்பது உங்களுக்கு தெரியுமா ? தமிழ் சினிமாவில் 80களில் மற்றும் 90களில் கவுண்டமணி உடன் செந்தில் சேர்ந்தால் தான் காமெடி கலைகட்டும். ஆனால், செந்திலுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு கவுண்டமணியுடன் ஒருவர் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

காமெடி ஜாம்பவான் கவுண்டமணியுடன் சேர்ந்து இவரும் காமெடியில் அசத்தியுள்ளார். அவர் பெயர் தான் கருப்பு சுப்பையா. அந்த காலத்தில் வெள்ளை சுப்பையா மற்றும் கருப்பு சுப்பையா என்று இரண்டு சுப்பையா இருந்தனர். ஆனால், இருவருமே தற்போது உயிருடன் இல்லை என்பதே சோகம். அதில் இவர் கருப்பாக இருந்ததால் இவருக்கு கருப்பு சுப்பையா என பெயர் வந்தது. இவர் மதுரையில் உள்ள திருமங்கலம் ஊரை சேர்ந்தவர்.

80களில் கலக்கிய சுப்பையா :

கவுண்டமணியும் இவரும் சேர்ந்த கிட்டத்தட்ட 80 படங்களில் நடித்துளனர். ஆரம்ப காலத்தில் பழனிச்சாமி, எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிய மருது, ஜல்லிக்கட்டு காளை, கட்டபொம்மன், செந்தூர பூவே, பட்டத்துராணி உள்ளிட்ட படங்களில் மெயின் ரோலில் நடித்தார். இவர் நடித்த பல காமெடி காட்சிகள் இன்றும் மறக்க முடியாத ஒன்று தான்.

Actor-Karuppu--subbiah

சுப்பையாவின் பிரபலமான காமெடிகள் :

-விளம்பரம்-

அதிலும், ஜல்லிக்கட்டு காளை படத்தில் வரும் ஜம்பலக்கடி பம்பா ஆப்பிரிக்கா அங்கிள் என்னும் கேரக்டர், பெரிய மருது படத்தில் வரும் அண்டாவுக்கு ஈயம் பூசும் கேரக்டர், கட்டபொம்மன் படத்தில் ஆயிரம் மூட்டை நெல் அறுவை செய்யும் கேரக்டர் ஆகியவை மிகவும் பிரபலம் ஆனவை. கவுண்டமணியுடன் கருப்பு சுப்பையா செய்த இந்த காமெடிகள் எல்லாம் இன்றைய இளைஞர்கள் கூட ரசிக்கும் வண்ணம் இருக்கும்.

-விளம்பரம்-

6 ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லை :

1960 ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடிக்கத் துவங்கிய இவர் 1997 வரை பல்வேரு படங்களில் நடித்தார். இறுதியாக கங்கையமரன் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான தெம்மாங்கு பாட்டுக்காரன் படத்தில் நடித்து இருந்தார். ஆனால், அதன் பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. காலங்கள் மாறியதால் இவருக்கு வாய்ப்புகளும் குறைந்தது.

ஆதரவின்றி இறந்த சுப்பையா :

அதே போல இறுதியில் இவர் உடல் நலக் குறைவாலும் அவதிப்பட்டுவந்தார் . கடைசி காலத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. மேலும், கவனிக்க ஆள இல்லாமமலும் போனதால் மிகவும் மனமுடைந்து போனார் கருப்பு சுப்பையா. இதனால் கடந்த 2013ஆம் ஆண்டு கேட்க ஆளின்றி நோய்வாய்ப்பட்டு பரிதாபமாக இறந்து போனார் சுப்பையா.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news