காமெடிய நடிகரான கோவை செந்திலை நீங்கள் பெரும்பாலான படங்களில் பார்த்திருக்கலாம். அதிலும் பாக்கியராஜ் படங்களில் இவரது கதாபாத்திரத்திரம் என்றும் மறக்க முடியாது. வடிவேலுவுடன் பெரும்பாலான காமெடி காட்சிகளிலும் இவர் நடித்துள்ளார்.

Advertisement

இதுவரை தமிழில் மட்டும் 400 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவரது வாழக்கை மிகவும் மோசமாகவே முடிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிறிய விபத்தில் சிக்கியவர், அதைக் குணப்படுத்துவதற்காக சொந்த ஊருக்குச் சென்றார் கோவை செந்தில். பிறகு, பட வாய்ப்புகள் அமையவில்லை. கடந்த 6 நாட்களுக்கு முன்னர் உடல் நல குறைபட்டால் சொந்த ஊரிலேயே உயிரிழந்தார் காமெடி நடிகர் செந்தில்.

தனது மகளின் திருமணத்தின் போதும் பணத்துக்கு நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறார், கோவை செந்தில். இதுகுறித்து காமெடிகரும், கோவை செந்திலின் நண்பருமான போண்டா மணி தெரிவிக்கையில்” 400 படங்கள்ல நடிச்சிருக்கார், ஆனால், ஒரு மகளை கட்டிக்கொடுக்க முடியலைனு சொல்லி என்கிட்ட பல முறை கஷ்டப்பட்டிருக்கார் அப்போது சில நடிகர்கள் உதவி பண்ண அந்தக் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது.” என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

கோவை செந்தில் குறித்து நடிகர் பார்த்திபன் பேசிய போது, `என்னோட நான் நடித்த “புதிய பாதை” படத்தில் கோவை செந்தில் நடித்தார். ஒரு கட்டத்தில் அவரோட தொடர்பே இல்லாமப் போயிடுச்சு. அவர் சென்னையில இருந்து கஷ்டப்படுற விஷயம் எனக்குத் தெரிஞ்சிருந்தா, என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்திருப்பேன். என்று மிகவும் உருக்கமுடன் கூறியுள்ளார்.

Advertisement