-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

மூன்று நாளா சாப்பிடல, இறப்பிற்கு முன் தன் மகன் மீதே புகார் அளித்த லூஸ் மோகன் – காமெடி நடிகர் வாழ்வில் நேர்ந்த சோகம்.

0
644

பிரபல நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன் காலமாகி இருந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்தவர் லூஸ் மோகன். இவர் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை லூசு ஆறுமுகமும். ஐவரும் ஒரு நகைச்சுவை நடிகர் தான்.

-விளம்பரம்-

டைட் அண்ட் லூஸ் என்ற நாடகத்தில் இவர் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு லூசு ஆறுமுகம் என்ற பெயர் வந்தது. தன்னுடைய தந்தையின் நினைவாக தான் இவர் தன்னுடைய பெயருக்கு முன்னால் லூசு என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார். அதன் பின் இவரும் பல மேடை நாடகங்களில் நடித்து இருக்கிறார். அதற்கு பிறகு தான் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

லூஸ் மோகன் குறித்த தகவல்:

இவர் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானது . அதன் பின் மூன்றுமுகம், நானும் ஒரு தொழிலாளி, பாட்டி சொல்லை தட்டாதே போன்ற படங்களில் இவரின் நகைச்சுவை மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மராத்தி, போஜ்புரி, இந்தி, துளு போன்ற பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

லூஸ் மோகன் குடும்பம்:

-விளம்பரம்-

இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் தங்கர் பச்சானின் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த அழகி என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு வயது மூப்பின் காரணமாக இவர் நடிக்கவில்லை. இதனிடையே இவருடைய மனைவி பச்சமாள் எட்டு வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் இருக்கிறார்கள். மூன்று மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்.

-விளம்பரம்-

லூஸ் மோகன் உடல் நிலை:

பின் இவர் தன்னுடைய மகன் கார்த்திக் உடன் சென்னையில் மயிலாப்பூரில் தனியாக தான் வசித்து வந்தார். 2012 மே மாதல் லூஸ் மோகன் தன்னுடைய மகன் மீது போலீசில் புகார் அளித்திருந்தார். அதில் அவர், என் மகன் கார்த்திக் என்னுடைய அடிப்படை தேவைகளை கூட கவனிக்கவில்லை. மூன்று நாட்களாக நான் சாப்பிடவில்லை. என்னை பார்த்துக் கொள்ள வில்லை என்றெல்லாம் கூறி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் உடல் நலக்குறைவால் லூஸ் மோகன் பாதிக்கப்பட்டு இருந்தார்.

லூஸ் மோகன் இறப்பு:

இதனால் இவரை உடனடியாக செப்டம்பர் 2012 ஆம் ஆண்டு மருத்துவமனையில் அழைத்து சென்றார்கள். ஆனால், செல்லும் வழியிலேயே லூஸ் மோகன் இறந்து விட்டார். அப்போது வயது 84. இவரின் மறைவிற்கு அதிமுக சார்பில் மலர் வளையம் அஞ்சலி செலுத்தினார்கள். இதை அடுத்து பிரபலங்கள் பலருமே தங்களுடைய இரங்கலை தெரிவித்து அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் கூறி இருந்தார்கள். தற்போது இவரின் மறைவு காரணம் குறித்த தகவல் தான் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news