பொது மேடையில் நடிகை ரெஜினாவின் பிகினி உடையை கிண்டல் செய்த சதிஷ்..! இப்படியா சொன்னார்

0
456
Actor-sathish
- Advertisement -

சினிமா நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். அதனை காணும் சில ரசிகர்கள் அந்த புகைப்படங்களை கிண்டல் செய்வதும் வழக்கம் தான். ஆனால், சமீபத்தில் நடிகை ரெஜினாவின் பிகினி உடையை காமெடி நடிகர் சதீஷ் கலாய்த்துள்ளார்.

sathish

தமிழில் 2013 இல் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ரெஜினா காசென்ரா. ஆனால் அந்த படத்திற்கு முன்பே 2005 இல் வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தில் துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமகிவிட்டார்.

- Advertisement -

சமீப காலமாக கவர்ச்சியான ஆடைகளை அணிந்து போட்டோ ஷூட் எடுத்து அதனை வெளியிட்டு வருகிறார் நடிகை ரெஜினா.தற்போது கவுதம் கார்த்திக்குடன் மிஸ்டர். சந்திரமௌலி என்ற படத்தில் நடித்துள்ள நடிகை ரெஜினா, அந்த படத்தில் ‘ஏதேதோ ஆனேனே’ என்ற பாடலில் பிகினி உடையில் தோன்றி அசத்தியுள்ளார். அந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்று வருகிறது.

Regina-Cassandra

இந்நிலையில் இந்த படத்தின் பிரெஸ் மீட் நிகழ்ச்சி நேற்று(ஜூன் 22) நடந்ததுள்ளது. இதில் மேடையில் பேசிய நடிகர் சதீஷ் ‘ரெஜினாவின் பிகினி உடையை கண்டு படம் சிறிய பட்ஜெட்டில் தயாராகியுள்ளது என நினைத்துவிடவேண்டாம். ரெஜினா உடை மட்டும் தான் லோ பட்ஜெட், ஆனால் படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது’ என்று பொது மேடையிலேயே ரெஜினாவை கலாய்த்துள்ளார்.

Advertisement