தமிழ் படம் 2-வில், விக்ரமின் இந்த படத்தின் கெட்டப்பையும் விட்டு வைக்காத சதிஷ். ஆனால், இது படத்தில் வரலயாம்.

0
2331
sathish
- Advertisement -

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகர் சதீஷிற்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. தமிழில் 2006-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘ஜெர்ரி’. இதில் ஹீரோவாக ‘ஜித்தன்’ ரமேஷ் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் தான் சதீஷ் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘தமிழ்ப் படம், கொல கொலயா முந்திரிக்கா, மதராசபட்டினம், வாகை சூட வா, மகான் கணக்கு’ போன்ற சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார் சதீஷ். அதன் பிறகு சிவகார்த்திகேயனின் ‘மெரினா, எதிர் நீச்சல்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இதில் ‘எதிர் நீச்சல்’ படத்தில் சதீஷின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இதையும் பாருங்க : Lockdown : தந்தைக்கு முடிவெட்டும் மகள். இயக்குனர் பேரரசுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காரா?

- Advertisement -

இதை தொடர்ந்து விஜய், தனுஷ், சூர்யா என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து விட்டார் சதிஷ். மேலும், இவர் சினிமாவில் வருவதர்க்கு முன்பாகவே கிரேசி மோகன் நாடக குழுவில் பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் சதிஷ் முழு நீள காமெடி நடிகராக நடித்தது 2018-ஆம் ஆண்டு வெளி வந்த’தமிழ்ப் படம் 2′ திரைப்படம் மூலம் தான்.

இதில் ஹீரோவாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். இந்த படத்தினை சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் சதீஷுக்கு பல வித்தியாசமான கெட்டப்புகள் இருந்தது. கடந்த சில தினங்களாக நடிகர் சதிஷ் ‘தமிழ்ப் படம் 2’ வில் போட்ட கெட்டப்புகளின் புகைப்படங்களையும் வீடீயோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் இவர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘இருமுகன்’ படத்தின் கெட்டப் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சதிஷ். இருமுகன் படத்தில் லவ் என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான வில்லனாகவும் நடித்திருந்தார் விக்ரம். இந்த படத்தில் விக்ரமின் லவ் கதாபாத்திரத்தின் கெட்டப்பை தமிழ் படம் 2விற்காக போட்டுள்ளார் சதிஷ். ஆனால், இந்த கெட்டப் படத்தில் வரவில்லையாம்.

Advertisement