விஜய் படத்தின் ஹீரோயினுடன் ஹீரோவாக நடித்துள்ள சத்யன். வைரலாகும் வீடியோ.

0
26874
sathyan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகர்களில் சத்யனும் ஒருவர் ஆவார். இவர் பெரும்பாலும் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் தான் நடித்து உள்ளார். நடிகர் சத்யன் சினிமா திரைப்பட தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவகுமாரின் ஒரே மகன் ஆவார். அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சத்தியராஜ் அவர்கள் இவருக்கு மாமா முறை ஆகும். இவர் பெரும்பாலும் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடித்து வருகிறார். நடிகர் சத்யன் அவர்கள் தமிழில் துப்பாக்கி, சிவா மனசுல சக்தி, ஆதவன், நண்பன், ராஜா ராணி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள காமெடி நடிகர்களில் தனக்கென ஒரு தனி இடத்தையும் பிடித்து உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த “நண்பன்” படத்தில் நடிகர் சத்யன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதோடு இந்த படத்தின் மூலம் தான் நடிகர் சத்யன் அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், நடிகர் சத்யன் அவர்களை திரை உலகில் பெரும்பாலும் காமெடி நடிகராக தான் அனைவருக்கும் தெரியும்.

- Advertisement -

உண்மையிலேயே இவர் முதன் முதலில் சினிமா உலகிற்கு கதாநாயகனாக தான் அறிமுகமாகி உள்ளார். 2000 ஆம் ஆண்டு வெளி வந்த இளையவன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிகர் சத்யன் அவர்கள் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை டி. பாபு இயக்கினார். மேலும், இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த கௌசல்யா அவர்கள் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கௌசல்யா விஜய் நடித்த பிரியமுடன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும், இவர்களுடன் இந்த படத்தில் கரண், வையாபுரி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். அதோடு இந்த படத்திற்கு இசை ஞானி இளையராஜா அவர்கள் தான் இசை அமைத்து இருந்தார். தற்போது இந்த இளையவன் படத்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீப காலமாகவே நடிகர் சத்யன் அவர்கள் சினிமா பக்கமே காணோம்.

-விளம்பரம்-
Advertisement