தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகளும் தங்ககளது கூட்டணிகளை பலப்படுத்தி வருகிறது. பொதுவாக தேர்தல் சமயத்தில் நடிகர் நடிகைகளை வைத்து மாநில காட்சிகள் பிரச்சாரத்தை செய்வது வழக்கமான ஒன்று தான். கடந்த 10 ஆண்டுக்கு முன் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுவிட்ட் நிலையில், தொடர்ந்து வடிவேலுவை படங்களுக்குக் கமிட் செய்வதில் தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குநர்கள் தயங்கியதாலேயே நடிப்பிலிருந்து ஒதுங்க வேண்டிய நிலை வந்தது.

வடிவேலு திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போதே காமெடி நடிகரான செந்தில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தை செய்து வந்தார். மேலும், பல ஆண்டுகளாக அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த நடிகர் செந்தில் சமீபத்தில் பா ஜ கவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.  ஜெயலலிதா மறைவை அடுத்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக அரசியல் பணியாற்றி வந்த தார் செந்தில். அந்தக் கட்சியின் செயல்பாடுகள் தனக்கு பிடிக்காததால் கட்சிக் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார் நடிகர் செந்தில் இதனால் கடந்த ஆண்டு செந்திலை கட்சியில் இருந்து நீக்கினார் டிடிவி தினகரன்.

இதையும் பாருங்க : அத மட்டும் பண்ணு ,அம்மா சத்தியமா சயீஷா திருமணத்த நிறுத்திட்ற – வாட்ஸ் அப் சாட்டிங் ஆதாரத்தை வெளியிட்ட காதலி.

Advertisement

இந்த நிலையில் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் செந்தில், ஊழலற்ற ஆட்சி என்பது பாஜகவின் வழக்கம் என்பதால் தான் அக்கட்சியில் இணைந்துள்ளேன். 1988-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பணியாற்றி வந்தேன். ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவில் தனக்கு உரிய இடம் கிடைத்தது. அவரது மறைவைத் தொடர்ந்து தற்போது நல்ல கட்சியில் இணைய வேண்டும் என்கிற அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருக்கிறேன். இனி பாஜக நல்ல முறையில் வளரும்.

மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்திருக்கிறேன். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். தலைமை கூறினால் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன். என்று கூறி இருந்தார் செந்தில். ஏற்கனவே பல்வேறு நடிகர் நடிகைகள் பா ஜ க கட்சியில் இணைந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement