காமெடி நடிகர் சூரியை கலாய்த்த சிவகார்த்திகேயன் ! பதிலுக்கு சூரி சொன்ன பதில் !

0
13685
soori-Actor
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உள்ளார் சூரி. பரத் காதல் படத்தில் சின்ன கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து தற்போது ஒரு முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். வெண்ணிலா கபடி குழு படத்தில், ‘பரோட்டா சீன்’ மூலம் பரோட்டா சூரியாக மாறினார்.

-விளம்பரம்-

soori

- Advertisement -

தற்போது வரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சூரி. இவரும் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்தால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. தற்போது கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார் சூரி.

இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து செல்பி எடுத்து போட்டுள்ளார் சூரி.

-விளம்பரம்-

இந்த வெள்ளந்தி சிரிப்பும் விளையாடுற தண்டட்டியும் தமிழ் மண்ணுக்கே உரிய அடையாளம். செல்ல அப்பத்தாக்களோடு ஒரு செல்பி…(கடைக்குட்டிசிங்கம் சூட்டிங் ஸ்பாட்)

என்று பதிவு செய்திருந்தார்.

இதனை பார்த்த சிவாகார்த்திகேயன். என்ன சூரி அண்ணே, க்ளாஸ் மேட்ஸ் கூட கெட்-டு கெதரா என சூரியை கலாய்த்துள்ளார்.

அதற்கு பதில் அளித்த சூரி, ஆமா பங்கு, பட் அவங்க டாடியோட க்ளாஸ் மேட்ஸ் பங்கு என கலகலப்பாக பதில் அளித்துள்ளார்.

Advertisement