சம்பாதிக்கற பணத்தை எல்லாம் யோகி பாபு இதை தான் செய்கிறாராம். உஷாரான ஆளு தான்.

0
135717
yogi-Babu
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக யோகி பாபு திகழ்ந்து வருகிறார். தற்போது நடிகர் யோகி பாபு அவர்கள் கோடிகளில் புரளுகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. சினிமா உலகில் ஒரு படம் சூப்பர் ஹிட் ஆனது என்றால் அதில் நகைச்சுவை நடிகர்களின் பங்கும் உள்ளது. முந்தைய காலத்தில் எல்லாம் காமெடி நடிகர்களின் நகைச்சுவைக்காவே படம் ஓடும் என்று சொல்வார்கள். அதுவும் நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேல் இவர்களுடைய நகைச்சுவைக்காகவே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர்களுடைய நகைச்சுவை நடிப்பாலும், சிந்திக்க வைக்கும் பேச்சாலும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர்கள். ஆனால், தற்போது வரும் காலங்களில் காமெடியா?? செய்கிறார்கள். இரட்டை அர்த்தம் கொண்ட பேச்சுக்களும், அடுத்தவர்களை கிண்டல் செய்வதும், தவறு தவறாக பேசுவதும் தான் காமெடி என்று நினைத்து செய்கிறார்கள்.

-விளம்பரம்-
Yogi-babu

முன்பு காலத்திலிருந்த காமெடி நடிகர்களை போல தற்போது யாரும் அந்த அளவிற்கு நகைச்சுவை செய்வதில்லை என்றும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் யோகி பாபு அவர்கள் தன்னுடைய வித்தியாசமான உடல் தோற்றத்தாலும், நகைச்சுவையான பேச்சாலும், காமெடி காட்சிகளாலும் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் முன்னணி நகைச்சுவை நடிகராக புகழின் உச்சத்தில் உள்ளார் என்று சொல்லலாம். 2009 ஆம் ஆண்டு தான் நடிகர் யோகிபாபு அவர்கள் சினிமா உலகிற்கு முதன் முதலாக காலடி எடுத்து வைத்தார். ஆனால், இவர் 2014 ஆம் ஆண்டு ‘யாமிருக்க பயமேன்’ என்ற திரைப்படத்தில் “பன்னி மூஞ்சி வாயா” என்ற டயலாக் மூலம் தான் மக்களிடையே பிரபலமானார்.

இதையும் பாருங்க : இதுக்குமேல இறக்க முடியாது. தாராளம் காட்டிய யாஷிகா. போதும் போதும்னு குதிக்கும் ரசிகர்கள்

- Advertisement -

மேலும், யோகி பாபு அவர்கள் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். நடிகர் யோகி பாபு அவர்கள் ஒரு நாளைக்கு 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார். இந்த பணத்தை எல்லாம் இவர் நிலத்தின் மீது கொடுக்கிறாராம். அதாவது நிலங்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கூட யோகி பாபு அவர்கள் அதிகமான விலையில் வீடு ஒன்று வாங்கி உள்ளார். அதில் குடியேறியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இப்படி பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு அவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவரே கூறியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் எல்லாம் ஆரவாரம் செய்து உள்ளார்கள்.

Yogi-Babu

மேலும், யோகி பாபு அவர்கள் தான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் நண்பர்களின் அறிவுரைப் படி சொத்துக்கள் வாங்குவதிலேயே நோக்கமாகக் கொண்டு உள்ளார் என்றும் தெரிய வந்து உள்ளது. நடிகர் யோகி பாபு வாழ்க்கையில் இனிமேல் யோகம் தான் என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள். சமீபத்தில் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் கூட யோகி பாபு தூள் கிளப்பி இருக்கிறார். தற்போது யோகி பாபு அவர்கள் நகைச்சுவை நடிகர் மட்டுமில்லாமல் படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். சந்தானத்திற்கு பிறகு யோகிபாபுவின் நடிப்பும், நகைச்சுவையும் பட்டையை கிளப்பி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement