ஷூட்டிங்கில் விஜய்யை கலாய்த்த யோகி பாபு ! விஜய் கூப்பிட்டு என்ன சொன்னார் தெரியுமா !

0
6898

பரட்டை தலை முடி, வெள்ளந்தி சிரிப்பு என எப்போது பார்த்தாலும் உற்சாகமாகவே இருக்கிறார் நடிகர் யோகிபாபு. “தலைவா… நீங்க என்ன வேணாலும் கேளுங்க. பதில் சொல்ல நான் ரெடி.” என்றவரிடம்… “தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரானால் என்ன பண்ணுவீங்கனு கேட்போம். பரவாயில்லையா?” என்றதற்கு “ஆஹா… எடுத்த உடனே பாலிடிக்ஸ் எல்லாம் வேண்டாம். அதை கடைசியா வைச்சுக்கலாம்” என அதையும் ஜாலியா எடுத்துக்கொண்டு சிரிக்கிறார் யோகி.
Yogi Babu‘மெர்சல்’ படம் ஷூட்டிங் போது விஜய் சார் அவ்வளவு பேசினார். அவர் கூட நடிச்சதே சூப்பர் அனுபவம். அவர் ஏதாவது சொல்வார். நானும் கம்முனு இல்லாம ஏதாவது கவுண்டர் கொடுப்பேன். எல்லாத்தையும் இயல்பா எடுத்துகிட்டாருங்க.

இதையும் படிங்க: காமெடி நடிகர் செந்தில் சினிமாவிற்க்குள் இப்படித்தான் வந்தாராம் !

- Advertisement -

ஒரு சீன் நடிக்கும்போது ஸ்பாட்லயே விஜய் சாரை செமயா கலாய்ச்சுட்டேன். சமந்தா, விஜய் சார்கிட்ட ‘தம்பி இங்க யார்ரா அஞ்சு ரூபாய் டாக்டர்’னு கேட்பாங்க. அதுக்கு விஜய் சார், ‘இங்க யாரைப் பார்த்தா பர்சனாலிட்டியா இருக்காங்களோ… அவங்கதான் அஞ்சு ரூபாய் டாக்டர்’னு சொல்லுவார். உடனே நான் ‘அப்ப நீ இல்லை… போய்ட்டு வா’னு சொல்லிடுவேன். அதை அப்படியே ஏத்துகிட்டார். இப்ப இருக்கும் ஹீரோஸ் ஏத்துப்பாங்களானு தெரியலை. இன்னொரு சீன்லயும் அவரை கலாய்க்கிறமாதிரி ஒரு டயலாக் பேசணும்னு சொன்னாங்க. நான் பயந்துட்டு பேசலை. விஜய் கூப்பிட்டு ‘அட.. நீ கலாய் நண்பா’னு தட்டிக்கொடுத்தார். வடிவேலு சார் கூட நடிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

Advertisement