பஸ் ஸ்டாண்டில் படுத்துக்கிடந்த ரங்கம்மா பாட்டி – வடிவேலுவின் பல படங்களில் நடித்த இவருக்கா இந்த நிலை. லேட்டஸ்ட் புகைப்படம்

0
1035
rangamma
- Advertisement -

சினிமாவை பொறுத்து வரை எத்தனையோ படங்களில் நடித்தும் வயதான காலத்தில் கேட்பாரற்று இருந்த எத்தனையோ நடிகர்களை நாம் பார்த்து இருக்கிறோம். பொதுவாக வயதானவர்களை வீட்டில் இருந்து ஒதுக்கி வைத்து விடுவது பலர் வீட்டில் நடக்கும் ஒரு கொடுமையான விஷயம் தான். ஆனால், இப்படி நடப்பது சினிமாவிற்கு மட்டும் விதிவிலக்கா ஏன்னா. தமிழில் அந்த காலத்தில் எம் ஜி ஆர் சிவாஜி போன்றவர்களின் படங்களில் நடித்த கே.ஆர்.ரங்கம்மா பாட்டி பீச்சில் பிச்சை எடுப்பதாக சமீபத்தில் செய்தி ஒன்று பரவியது. ஆனால், அது முற்றிலும் பொய் என்பதே உண்மை.

-விளம்பரம்-
rangamma_patti

எம் ஜி ஆரின் செல்ல பிள்ளை :

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலுவின் பல காமெடிகளில் இவரை நீங்கள் பார்த்திருக்கலாம். அதிலும் குறிப்பாக ‘ந்தா அந்த நாய கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டு போ’ என்ற இவரது காமெடிக் காட்சியை மறந்திருக்க மாட்டோம்.ஆனால் அக்காலத்தில் தேவர் பிலிம்ஸ் தேவர் மூலமாக புரட்சி தலைவர் எம் ஜி ஆரின் விவசாய படத்தில் ஒரு பாடல் மூலமாக அறிமுகம் செய்வபட்டவர்.அதன் பின்னர் எம் ஜி ஆர்,சிவாஜியுடன் பல படங்களில் நடித்துள்ளார்.படங்களில் நடித்த போது எம் ஜி ஆர் சிவாஜி ஆகியோருக்கு செல்ல பிள்ளையாக இருந்திருக்கிறார்

- Advertisement -

எம் ஜி ஆர் வீட்டில் சமையல் :

தன்னுடைய சமையல் பிடித்ததால் எம் ஜி ஆர் தன்னை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து சமையல் செய்து தரசொல்வாரம் அப்போதே அதற்காக 10000 ரூபாயை அளித்தாராம் எம் ஜி ஆர் அவர்கள். இவருக்கு மொத்தம் 12 பிள்ளைகள். அனைவருக்கு திருமணமாகி விட்டது தற்போது 3 பெண்கள் மட்டும் உள்ளனர். அவர்களுக்காக நான் இரண்டு வீடு வாங்கி கொடுத்தேன் அதனை அவர்கள் இருவரும் விற்றுவிட்டனர்.ஒரு பெண் மட்டும் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள் .

ரங்கம்மாள் பாட்டிக்கு உதவிய அபிசரவணன்..!

சினிமாவோடு சைட் பிஸ்னஸ் :

வெறும் சினிமாவில் சிறு திரையிடல்களில் மட்டும் நடித்துக்கொண்டு இந்த இரண்டு பிள்ளைகளை வளர்த்து விட முடியுமா. இவர் ஒரு பையில் சோப்பு சீப்பு சிறுசிறு பொருட்கள் என்று பலவற்றை விற்று தன் பிள்ளைகளை வளர்த்திருக்கிறார். இவர் எந்த படப்பிடிப்பிற்கு சென்றாலும் இவருடன் அந்த பை எப்போதும் இருக்குமாம். சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய மினி கடையை பரப்பி வியாபாரத்தில் இறங்கி விடுவாராம்.

-விளம்பரம்-

எம் ஜி ஆரின் கொள்கையோடு வாழ்க்கை :

மேலும், இதுவரை நான் யாரிடமும் உதவி செய்யுங்கள் என்று போய் நின்றது இல்லை என்று கூறுகிறார் அவர்களாக அழைத்து ஏதாவது உதவி செய்தால் அதை ஏற்றுக் கொள்வேன் எம்ஜிஆரிடம் வளர்ந்த பெண் என்பதால் உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்ற கொள்கையில் மிகுந்த நம்பிக்கை கொண்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார் ரங்கம்மா பாட்டி.

பீச்சில் பொம்மை வியாபாரம் :

நான் இப்போதும் கூட படங்களில் நடித்து வருகிறேன். ஆனால் இப்போது உள்ள படங்கள் எல்லாம் எனக்கு பிடிக்க வில்லை என்று சிரித்த படியே கூறினார்.பின்னர் நான் பிச்சை எல்லாம் எடுக்க வில்லை ஷூட்டிங் இல்லாத நேரங்களில் எம் ஜி ஆர் சமாதிக்கு சென்று பொம்மை மற்றும் இதர பொருட்களை விற்று வருவேன் அதில் எனக்கு 300 முதல் 400 ரூபாய் வரை கிடைக்கும் என்று கூறினார். நடித்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதும் தனக்கு எந்த விதமான காட்சியை கிடைத்தாலும் சரி.

பஸ் ஸ்டான்ட்டில் படுத்துக்கிடந்த பாட்டி :

திரைப்படங்களில் வசனமே இல்லாமல் சும்மா தெருவை கடக்கும் ஒரு காட்சியில் நடித்தாலும் அதுவே எனக்கு போதும் என்று கூறியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தற்போது இவர் உடல் நடை முடியாமல் பஸ் ஸ்டான்ட்டில் படுத்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. சமீபத்தில் உடல் நலம் சரியில்லாமல் போக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஊர் திரும்பிய போது பஸ் ஸ்டான்ட்டில் படுத்துகொண்டு இருக்கும் புகைப்படம் தான் அது.

Advertisement