முகத்தில் சீதை சாயல் கொஞ்சம் கூட இல்லை- சாய்பல்லவிக்கு எதிராக கிளப்பிய சர்ச்சைகள்

0
175
- Advertisement -

‘ராமாயண’ கதையில் சீதையாக சாய்பல்லவி நடிப்பது குறித்து ஹிந்தி நடிகர் சுனில் லாஹ்ரி கூறியிருக்கும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ராமாயணமும் ஒன்று. இதை நிறைய பேர் படங்களாகவும், சீரியல் ஆகவும் எடுத்து இருக்கிறார்கள். சமீபத்தில் கூட ‘ஆதி புரூஸ்’ என்ற பெயரில் பிரபாஸ் நடிப்பில் அனிமேஷன் பாணியில் ராமாயண கதை வெளியாகியிருந்தது.

-விளம்பரம்-

அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது ஹிந்தியில் இயக்குநர் நித்தேஷ் திவாரியின் இயக்கத்தில் ராமாயண கதையை எடுத்து வருகிறார்கள். இதில் ராமராக ரன்வீர் கபூரும், சீதாவாக சாய் பல்லவியும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படம் தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதற்கு, சாய் பல்லவி குறித்து எதிர் விமர்சனம் கொடுத்து இருந்தார்கள்.

- Advertisement -

ரன்பீர் கபூர்- சாய்பல்லவி படம்:

கடந்த ஆண்டு ரன்பீர் கபூரின் நடிப்பில் வெளியாகி இருந்த ‘அனிமல்’ படம் மோசமான விமர்சனங்களை சந்தித்திருந்தது. வசூலில் கோடிக்கணக்கில் வாரி குவித்து இருந்தாலும் விமர்சன ரீதியாக பிரபலங்கள் மத்தியில் கூட கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருந்தது. ஆணாதிக்கம், பெண்களை அவமரியாதையாக நடப்பது போன்ற பல செயல்கள் இந்த படத்தில் காண்பித்து இருந்தார்கள். இப்படி இருக்கும்போது இவர் ராமராக நடித்திருப்பதை எப்படி மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்? என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள்.

நடிகர் சுனில் லாஹ்ரி பேட்டி:

இந்த நிலையில் இது தொடர்பாக டிவியில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் லஷ்மணன் ரோலில் நடித்த பிரபல ஹிந்தி நடிகர் சுனில் லாஹ்ரி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், அனிமல் படம் பார்த்த பிறகு அதில் நடித்த ரன்வீர் கபூர் ராமராக கற்பனை செய்து பார்ப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. சீதை வேடத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். ஆனால், அவருடைய முகத்தில் சீதை சாயல் கொஞ்சம் கூட இல்லை.

-விளம்பரம்-

சாய்பல்லவி குறித்து சொன்னது:

சீதையாக அவர் எப்படி நடிக்கப் போகிறார் என்று எனக்கு புரியவில்லை. சாய் பல்லவி நடித்த படங்களை நான் இதுவரை பார்க்கவில்லை. அவர் முகத்தில் தேவதைக்குரிய இலட்சணங்கள் இல்லை என்று கூறி இருந்தார். இப்படி இவர் கூறியிருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை ‘சாய் பல்லவி’. இவர் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

சாய்பல்லவி திரைப்பயணம்:

பின் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த “பிரேமம்” படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய்பல்லவி ஒட்டு தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். அதன் பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அமரன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இது மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படம். இதனை அடுத்து தமிழ், தெலுங்கில் ஒரு படம், பாலிவுட் என பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.

Advertisement