கோட் படத்திற்காக தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் கோட் படம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் தான்.
அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ பட படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. லியோ படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறார்கள்.
கோட் படம்:
மேலும், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. இன்று பிரம்மாண்டமாக கோட் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் கோட் படத்திற்காக நிறுவன உரிமையாளர் விடுமுறை அளித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தின் வைரலாகி வருகிறது. அதாவது, முன்னணி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் விக்னேஷ் முரளிதரன்.
நிறுவன உரிமையாளர் செய்தது:
இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். இருந்தாலுமே, தன்னுடைய நிறுவனத்தின் ஊழியர்கள் கோட் படத்தை பார்க்க ஆசைப்பட்டதால் ஒரு நாள் விடுமுறை அளித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசாக கோட் படத்தின் உடைய டிக்கெட்டையும் கொடுத்திருந்தார். காரணம், எப்படி இருந்தாலும் ஏதாவது ஒரு பொய் சொல்லி ஊழியர்கள் விடுமுறை எடுப்பார்கள். அதற்காகத்தான் விக்னேஷ் முரளிதரன், ஊழியர்கள் கொண்டாடும் வகையில் இன்று விடுமுறை அளித்திருக்கிறார். இவரின் நல்ல உள்ளத்தை நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் மட்டும் இல்லாமல் பலருமே பாராட்டி இருக்கிறார்கள்.
படத்தின் கதை:
கதையில், கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர, SAT squad டீம் களம் இறங்குகிறது. அதில் விஜய் (காந்தி), களம் (அஜய்), பிரசாந்த் (சுனில்), பிரபுதேவா (கல்யாண்) ஆகியோர் ஆயுதங்களுடன் களம் இறங்குகிறார்கள். அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மோகன் (மேனன்) இறந்து விடுவதாக காட்டப்படுகிறது. இதற்கிடையே தாய்லாந்திற்கு தனது மனைவி (சினேகா) உடன் செல்லும் காந்தி, தனது மகனை பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது.
விஜய் குறித்த தகவல்:
கடைசியில் அவனை காந்தி ஒரு பிரச்சனையில் சந்திக்கிறார். அந்தப் பிரச்சனை என்ன? காந்திக்கு வில்லனாக ஜீவன் (விஜய் மகன்) மாறியது எப்படி? என்பதுதான் படத்தின் மீதி கதை. இதை அடுத்து விஜய் அவர்கள் தளபதி 69 என்ற படத்தில் நடிக்கிறார். இதை வினோத் இயக்குகிறார். இது தான் விஜய்யின் கடைசி படம். இதை தொடர்ந்து விஜய் அவர்கள் முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். சமீபத்தில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம்படுத்தி இருக்கிறார்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.