தனுஷின் தாய் கிழவி பாடல் மீது எழுந்த புகார்- இந்த வரிகள் தான் காரணமாம்.

0
271
- Advertisement -

தனுஷின் தாய் கிழவியின் பாடலின் சில வார்த்தைகள் அவமரியாதை செய்யும் வகையில் உள்ளதாக புகார் அளித்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதற்கு பின் தனுஷ் அவர்கள் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது.

- Advertisement -

தனுஷ் நடிக்கும் படங்கள்:

செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முடிந்த நிலையில் படக்குழு அடுத்த கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை படம் தனுஷ் அவர்கள் வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தனுஷின் ஹாலிவுட் படம் :

அதேபோல் தனுஷ் நடித்த ஹாலிவுட் படம் தி கிரேட் மேன். இந்த படம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து தனுஷ் அவர்கள் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர்.

-விளம்பரம்-

தாய்க்கிழவி பாடல் :

இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் முதல் சிங்கிளான தாய்க்கிழவி பாடல் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது. இந்த பாடலை தனுஷ் எழுதி பாடியிருக்கிறார். இந்தப் பாடல் வீடியோ யூ-ட்யூபில் 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இருக்கிறது.

பாடல் மீது எழுந்து உள்ள புகார்:

இந்நிலையில் பாடலின் வரிகள் வேடிக்கையாக இருந்தாலும், சமூக ஆர்வலர் ஒருவர் பாடலின் சில வரிகள் பெரியவர்களை மரியாதை செய்யும் வகையில் உள்ளதாக புகார் அளித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பாடலின் சில வரிகளை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement