விஜய் சேதுபதி மீது ஆத்தங்குடி டைல்ஸ் நிறுவனம் புகார் கொடுத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி 11வது வாரம் தொடங்கி 72 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். அதோடு நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் ஆட்டம் விறுவிறுப்பாக செல்கிறது. இப்படி இருக்கும் நிலையில் விஜய் சேதுபதி மீது புகார் எழுந்து இருக்கும் தகவல் தான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ் குறித்து நடிகரும், பிக் பாஸ் போட்டியாளரும் ஆன தீபக் தவறான கருத்தை கூறியிருந்தார்.
விஜய் சேதுபதி மீது புகார்:
அதை டிவியில் அப்படியே ஒளிபரப்பு செய்திருந்தார்கள். இதனால் ஆத்திரமடைந்த ஆத்தங்குடி டைல்ஸின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காரைக்குடி காவல் ஆணையத்தில், நிகழ்ச்சியில் தவறாக பேசிய நடிகர் தீபக், அதனை ஒளிபரப்பிய விஜய் டிவி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி ஆகியோர் மீது புகார் கொடுத்திருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஆத்தங்குடி டைல்ஸ் உற்பத்தியாளர், சிவகங்கையில் சிறப்பு மிக்க பகுதி எங்களுடைய ஆத்தங்குடி பகுதி.
ஆத்தங்குடி டைல்ஸ் பேட்டி:
அங்கு தயாரிக்கிற டைல்ஸ் தான் ஆத்தங்குடி டைல்ஸ். எங்களுடையது உலக பெயர் பெற்ற டைல்ஸ். ஆனால், எங்களுடைய ஆத்தங்குடி பெயரை கெடுக்கும் வகையில் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் KAG டைல்ஸின் ஸ்பான்சர் எங்களுடைய ஆத்தங்குடி டைல்ஸை இழிவுபடுத்தி பேசி இருக்கிறார்கள். இந்த ஸ்டைல்ஸ் கையாள சிரமம், சரியாக சைஸ் இருக்காது, கரப்பிடிக்கும், இது நிரந்தரமானது கிடையாது என்றெல்லாம் விளம்பரத்திற்காக பேசி இருக்கிறார்கள். எங்களுடைய டைல்ஸை எடுத்து அவர்களுடைய பெயரை வைத்து செய்து இருக்கிறார்கள்.
புகாருக்கான காரணம்:
இதை நாங்கள் குடிசை தொழில் போல செய்து வருகிறோம். ஆயிரம் குடும்பம் இதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய டைல்ஸின் பெயரை பயன்படுத்தி அவங்களுடைய டைல்ஸை மார்க்கெட்டிங் செய்ய விஜய் டிவியும், பிக் பாஸ் நிகழ்ச்சியும், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியும், போட்டியாளர்கள் எல்லோருமே சப்போர்ட் செய்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். நாங்கள் காவல்நிலையில் நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்து இருக்கிறோம். இல்லை என்றால் நாங்கள் எல்லோருமே போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். பகிரங்கமாக நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.