நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை கொலை செய்யப்பட்டதாக எச் ராஜா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன், தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் பல விருது வழங்கும் விழாவில் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்து வந்திருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் எந்த ஒரு மேடையில் விருதை வாங்கினாலும் எந்த மறைந்த தந்தையை பற்றி பேசாமலும் இருந்தது இல்லை.ஆனால், இதுவரை அவரது தாய் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் கலந்து கொண்டது கிடையாது.

Advertisement

இப்படி ஒரு நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை கொலை செய்யப்பட்டார் என்று எச் ராஜா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எச் ராஜா பற்றி சொல்லவா வேண்டும். இதுபோல பல்வேறு சர்ச்சை பேச்சுக்கு அவர் பெயர் போனவர்தான் என்றாலும் சமீபத்தில் இவரது பேச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்,

ஜெயபிரகாஷ் என்ற ஜெயிலரை தற்போதைய பாபனாசம் எம்.எல்.ஏ கொலை செய்ததாகவும், பாதிக்கப்பட்டவரின் மகன் நடிகர் சிவகார்த்திகேயன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் சிவகார்த்திகேயனின் தந்தையின் பெயர் உண்மையில் ஜி. தாஸ் மற்றும் அவரது மரணம் இயற்கையானது என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில் பொய்யான கருத்துகளை பரப்பிவருவதாக எச் ராஜா மீது மனித நேயமக்கள் கட்சி வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள  வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையான ஜெயிலர் தாஸ் மாரடைப்பு காரணமாக பல வருடங்களுக்கு முன்பு இறந்ததாகவும், வேண்டுமென்றே எச்.ராஜா சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவின் பெயரை கெடுப்பதற்காக பொய்யான கருத்துகளை பரப்பி வருவதாவும் கூறியுள்ளார். எச் ராஜா அவதூறு கருத்துகளை பரப்பிவிட்டு மன்னிப்பு கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் இந்த முறை மன்னிப்பு கேட்டாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.  

Advertisement
Advertisement