தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக விளங்கி வருபவர் நடிகர் யோகிபாபு. ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தாலும் தற்போது படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். மேலும், பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து உள்ளார் யோகிபாபு. இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் யோகி பாபுவுக்கு இன்றைக்கு தான் திருமணம் நடந்தது. அதுக்குள்ள யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார்கள். சமீப காலமாகவே நடிகர் யோகி பாபுவிற்கு திருமணம் என்று வதந்திகள் பரவியது. ஆனால், அது பொய் எல்லாம் என்றும் கூறி இருந்தார் யோகி பாபு. தற்போது ஒரு வழியாக யோகி பாபு திருமணம் நடைபெற்றுள்ளது. யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் சிம்பிளாக இவர்களுடைய திருமணம் நிறைவடைந்துள்ளது. இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. நெருங்கிய உறவினர் மற்றும் சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணம் சிம்பிளாக நடந்தாலும் ரிசாப்ஷனை வெகு சிறப்பாக செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதில் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் யோகி பாபு மீது இந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பு சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த புகாரில் கூறியிருப்பது, தமிழ் சினிமா துறையில் சமீப காலமாகவே இந்து கடவுள்களையும், இந்து மத உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் எடுக்கின்றன.
நடிகர் யோகி பாபு அவர்கள் ஒரு புதிய படத்தில் முருகன் வேடத்தில் நடித்திருக்கிறார். தற்போது அந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் முருகனின் வாகனமாக மயிலுக்கு பதில் கிளியை போட்டு சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து உள்ளனர். இது முருக பக்தர்களின் மனதை புண் படுத்தி உள்ளது. இதன் காரணமாக நடிகர் யோகி பாபு மீதும், அந்த படத்தின் இயக்குனர் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்னிக்கி தான் திருமணம் முடிஞ்சிச்சி அதுக்குள்ள யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகாரா? என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றன.