வைரமுத்துவின் புதிய பாடல் வரியால் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் – அப்படி என்ன எழுதி இருக்கார் பாருங்க ?

0
75841
vairamuthu
- Advertisement -

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். பாடகி சின்மயி கூறி இருந்த குற்றச்சாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு “வீழ மாட்டோம்” ஆல்பம் வெளியீட்டுக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது வைரமுத்து சார்பாக தனக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் கவிஞர் வைரமுத்துவிற்கு தனியார் பல்கலை கழகம் சார்பாக டாக்டர் பட்டம் வழங்குவதாக இருந்தது. இந்த பட்டத்தை மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் வழங்க இருப்பதாகவும் அழைப்பிதழ் கூட வெளியானது. ஆனால், வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கூடாது என்று சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமான பதிவு ஒன்றை செய்திருந்தார்.

- Advertisement -

அதே போல வைரமுத்து , மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதனையும் சின்மயி சந்தோசமாக பதிவிட்டு இருந்தார். அதே போல அடிக்கடி வைரமுத்து பற்றி சர்ச்சையான பதிவுகளை சின்மயி போட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் வைரமுத்து எழுதிய புதிய பாடல் ஒன்று புதிய சர்ச்சையை சந்தித்து உள்ளது.

கவிப்பேரரசு வைரமுத்து நாட்படு தேறல் என்ற தலைப்பில் 100 பாடல்களை உருவாக்கி உள்ளார். 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் வைரமுத்துவின் 100 பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இதன் முதல் பாடல் ஏப்ரல் 18-ந் தேதி கலைஞர் டிவி மற்றும் இசையருவி சேனல்களில் ஒளிபரப்பானது.

-விளம்பரம்-

ஒவ்வொரு வாரமும் ஒரு பாடல் வீதம், நாட்படு தேறல் என்ற தலைப்பின் கீழ் பாடல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘என் காதலா! காதல் வயது பார்க்குமா? என்ற பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடலில் இடம்பெற்றுள்ள ‘வயதால் நம் வாழ்வு முறியுமா, வாய் முத்தம் வயது அறியுமா?’ வரி தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் இந்த பாடலை கலைஞர் டிவியில் ஒளிபரப்ப கூடாது என்று பலர் கூறி வருகின்றனர். மேலும், இந்த வரிகள் மூலம் வைரமுத்து மீது தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள சின்மயி, திரு. வைரமுத்து ஒரு பாடலுடன் வெளிவந்திருப்பதாகத் தெரிகிறது, இது ஒரு பள்ளி பெண் ஒரு நடுத்தர வயது ஆணுடன் காதலிப்பதைப் பற்றி பேசுகிறது. இந்த பாடல் தமிழ் சேனல்களில் ஒளிபரப்பப்படுகிறது. பாலியல் சீர்ப்படுத்தல் என்ற கருத்து இந்த நாட்டில் காது கேளாத ஆண்டுகளில் விழுகிறது, இதை மகிமைப்படுத்தும் ஒன்று இங்கேஇருக்கிறது, அது ‘என்வாழ்வில் தந்தை இல்லையே! தந்தைபோல் கணவன் வேண்டுமே’ .

Advertisement