குக்கு வித் கோமாளி செட்டில் சிவகார்த்திகேயன் – ஷிவாங்கி போல செய்த மிமிக்ரி. வீடியோ இதோ.

0
1314
shivangi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது. சொல்லப்போனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.

-விளம்பரம்-

இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர். இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தாவும் இதுவரை வெளியேறியுள்ளனர்.

இதையும் பாருங்க : இதனால் நிதியை ‘சிம்பு மாமா ஐ லவ்யு’னு சொல்ல சொன்னேன். சர்ச்சை குறித்து நடிகையோடு சேர்ந்து சுசீந்திரன் விளக்கம்.

- Advertisement -

இந்த சீசன் இந்த அளவிற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதற்கு காரணமே இந்த சீசனில் வரும் கோமாளிகள் தான். அதிலும் புகழ், பாலா, ஷிவானி, மணிமேகலையின் ரகலைகளுக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. அதிலும் இந்த சீசனில் புகழுக்கு நிகராக ஷிவாங்கி வேற லெவலில் என்டர்டைன் செய்து வருகிறார்.இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்து தான் சினிமாவிற்கு சென்றார். இருந்தாலும் அவ்வப்போது பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக விசிட் அடித்துவிடுகிறார். அந்த வகையில் இந்த வாரம் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ள சிவகார்த்திகேயன் பாலாவை பாராட்டியதோடு ஷிவாங்கி போலவே மிமிக்கிரி செய்து அசதியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement