இதனால் நிதியை ‘சிம்பு மாமா ஐ லவ்யு’னு சொல்ல சொன்னேன். சர்ச்சை குறித்து நடிகையோடு சேர்ந்து சுசீந்திரன் விளக்கம்.

0
1026
susi
- Advertisement -

ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சுசீந்திரன், படத்தின் நாயகியான நிதி அகர்வாலிடம் வரம்பு மீறி பேசியதாக எழுந்த சர்ச்சைக்கு சுசீந்திரன் தன்னிலை விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் சிம்பு மாநாடு படத்தில் நடித்து வந்த நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. ஆனால், அதற்குள்ளாகவே இந்த படத்தின் படப்பிடிப்பே நிறைவடைந்துவிட்டது. கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலா சரவணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

-விளம்பரம்-

தமன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட் செய்கிறார். ஜீரோ’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களைத் தயாரித்த மாதவ் மீடியாவின் 5-வதாக தயாரிப்பாக‘ஈஸ்வரன்’ படம் உருவாகியுள்ளது.  திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கிய ‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பு 40 நாட்களில் நிறைவடைந்தது. இந்த படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதையும் பாருங்க : முன்னழகை புக்காள் மறைத்து ஜூலி கொடுத்த போஸ் – ஜூலியா இதுன்னு வியந்திருவீங்க.

- Advertisement -

இந்த படத்தின் இசை வேலியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் நாயகி நிதி அகர்வால் பேசும் போது அவரது அருகில் வந்து நின்ற இயக்குனர் சுசீந்திரன் சிம்பு மாமா ஐ லவ் யூனு சொல்லு என்று அவரை நிர்பந்தித்து கொண்டே இருந்தார். இதனால் நிதி அகர்வால் சங்கடத்திற்கு உள்ளனர். இத்தோடு நிற்காமல், நிதி அகர்வாலுடன் பெல்லி டான்ஸ் அடலாமா என்றும் கேட்டார் சுசீந்திரன். அதற்கு நிதி அகர்வால் சிம்புவை போல விரலில் சைகை செய்து முத்தமிட்டார்.

ஆனால், அப்போதும் விடாத சுசீந்திரன் நடனம் ஆடவில்லை என்றால் அடுத்த படத்தில் செலக்ட் பண்ண மாட்டேன் என்றார். சுசீந்த்ரினின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ள சுசீந்திரன் பாடல் வெளியீட்டு விழாவில் ஜாலியாகப் பேசிய விஷயம். படத்தில் சிம்புவை விரட்டி விரட்டி நிதி அகர்வால் காதல் செய்வதுபோல காட்சிகள் உள்ளன. ‘ஐ லவ் யூ மாமா… ஐ லவ் யூ மாமா’ என்பது போலத்தான் அவருடைய நடவடிக்கைகள் இருக்கும். சிம்பு விலகி விலகிப் போவார். படத்தின் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்துதான் அப்படி சொல்லச் சொன்னேன். ஆனால், நிறைய பேர் தவறாகப் புரிந்துகொண்டார்கள். அதற்கான விளக்கமாக இதைச் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement