அட, குக்கு வித் கோமாளி தீபா மெட்டி ஒலி சீரியல்ல நடிச்சிருக்காங்களே – வீடியோ இதோ.

0
16849
deepa
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது. சொல்லப்போனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.

-விளம்பரம்-

இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர். இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தாவும் இதுவரை வெளியேறியுள்ளனர்.

இதையும் பாருங்க : மெட்டி ஒலி முதல் ரோஜா சீரியல் வரை கலக்கி வரும் காயத்திரியின் குழந்தையை பார்த்துள்ளீ ர்களா ?

- Advertisement -

இந்த சீசனில் கோமாளிக்கு நிகராக காமெடி செய்து வருபவர்கள் மதுரை முத்து மற்றும் தீபா தான். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவே பல படங்களில் நடித்துள்ளார். மாயாண்டி குடும்பத்தார், வெடிகுண்டு முருகேசன் என்று ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் அரியப்பட்டது என்னவோ கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் தான். ஆனால், நடிகை தீபா , சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியலான ‘மெட்டி ஒலி ‘ தொடரில் நடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல் என்றால் அது மெட்டி ஒலி தான். அதிலும் மெட்டி ஒலி சீரியலில் ஒளிபரப்பான ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தையும் அவரது குடும்பமும் அதற்குள் நடக்கும் நிகழ்வுகளையும் மையமாக வைத்து தான் மெட்டி ஒலி. இந்த சீரியல் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீரியல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டானது.

-விளம்பரம்-

Advertisement