மெட்டி ஒலி முதல் ரோஜா சீரியல் வரை கலக்கி வரும் காயத்திரியின் குழந்தையை பார்த்துள்ளீ ர்களா ?

0
4211
gayathri
- Advertisement -

மெட்டி ஒலி சீரியல் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சரோஜா கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரி தாங்க. ஆமாங்க, அவங்க இப்ப நம்ம காயத்ரி பத்தி தான் பார்க்க போகிறோம். அவங்க இப்ப என்ன பண்ணிட்டு இருக்காங்க? என்பத பத்தி பார்க்கலாம்.. நடிகை காயத்ரியின் பூர்விகம் கர்நாடகம். ஆனா, இவங்க பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான். அதோடு காயத்ரியோட அண்ணன் சஞ்சய். இவர் ஒரு திரைப்பட நடிகர். அப்ப ஒரு நாள் காயத்ரி அண்ணன் சஞ்சய்யை பேட்டி எடுக்க வந்து இருந்தாங்க. மேலும், அந்த பேட்டியை பார்க்கிறதுக்காக காயத்ரி சென்னைக்கு வந்திருந்தாங்க. அங்க வந்த இயக்குனர் சுரேஷ் மேனன் காயத்ரியை பாத்துட்டு படத்தில் நடிக்க கேட்டார். காயத்ரியும் சரி என்று சொன்னார். பின் சுரேஷ் மேனன் இயக்கிய ‘பாசமலர்’ படத்தில் தான் காயத்ரி முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாங்க. அப்புறம் விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் காயத்ரி நடித்து இருந்தாங்க.

-விளம்பரம்-
காயத்ரி

அதற்கு பிறகு அவங்க ஐந்து மொழி படங்களிலும் பிசியாக நடிச்சிட்டு வந்தாங்க. மேலும்,இப்படி படங்களில் பிஸியா ஹீரோயினாக நடிச்சிட்டு இருக்கும் போதே குட்டி பத்மினி அவர்கள் ஒரு இந்தி சீரியல்ல காயத்திரிய நடிக்க கேட்டாங்க. அவரும் சீரியல்,படம் என நடிச்சிட்டு வந்தாங்க. அதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ‘குடும்பம், சாவித்திரி, லட்சியம்’ உட்பட பல சீரியலிலும் நடிச்சாங்க. அதுமட்டும் இல்லாம சினிமாவில் கிடைக்காத புகழ் சின்னத்திரையில் கிடைத்தது என காயத்திரி பல பேட்டியில சொன்னாங்க. இவங்க மக்களிடம் இந்த அளவுக்குப் பிரபலமாக இருப்பதற்கு காரணம் “மெட்டி ஒலி” சீரியல் தாங்க. மேலும், திருமுருகன் டைரக்ஷன்ல ரெண்டு சீரியல்ல காயத்திரி நடிச்சாங்க. ஆனா, அந்த ரெண்டு சீரியல்ல விட மூன்றாவதாக நடித்த ‘மெட்டி ஒலி’ சீரியல் தான் இவங்க வாழ்க்கையில ஒரு டர்னிங் பாயின்ட்டாக இருந்ததுன்னு சொல்லலாம்.

- Advertisement -

இந்த சீரியல்ல சரோஜா கேரக்டர்ல்ல நடிச்சிருந்தாங்க. மேலும், அந்த கேரக்டர் மூலம் குடும்ப பெண்களின் வீட்டில் ஒருவராகவே மாறிவிட்டார். இதனைத் தொடர்ந்து இவங்க தமிழில் ‘மேகலா’, தெலுங்குல ‘தேவதா’ போன்ற பல சீரியல்ல நடிச்சிட்டு வந்தாங்க. இப்படி சீரியல்ல காயத்திரி பிசியாக நடித்து இருக்கும் போது இவங்களுக்கு கல்யாணம் ஆனது. இவருடைய கணவர் ரவி. இவர் சின்னத்திரை இயக்குனர். அதாவது பல சீரியல்களை இயக்கி உள்ளார். கல்யாணம் ஆன பிறகு இவங்க ஜீ தமிழ்லில் ‘நெஞ்சை கிள்ளாதே’ சீரியல் தாங்க கடைசியா நடிச்ச சீரியல். அதுக்கு பிறகு இவங்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துச்சு. குழந்தைய முழு அரவணைப்போடு கவனிக்க வேண்டும் என்று கொஞ்ச நாள் நடிக்கிறதுல இருந்து இடைவெளி எடுத்துக் கிட்டாங்க.

Related image

அதோட மூன்று வருஷம் அவங்க எந்த ஒரு படத்திலையும், சீரியல்லையும் நடிக்கல. குழந்தை வளர்ந்த பின்னால நடிக்கலாம் என்று சொல்லி இருந்தாங்க. இப்போ மீண்டும் காயத்திரி சன் டிவியில ஒளிபரப்பாகும் சீரியல்ல நடச்சிட்டு வர்றாங்க. ஆமாங்க, சன் டிவியில பிரபலமான சீரியல் ஒன்னு ரோஜா சீரியல். இந்த ரோஜா சீரியல்ல அம்மா என்ற கதாபாத்திரத்தில் நம்ம காயத்ரி நடச்சிட்டு வர்றாங்க. நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்து நடிச்சாலும் மக்கள் மனசுல இன்னும் சரோ–வா நீங்காத இடம் பிடிச்சிருக்காங்க. அதுமட்டுமில்லாம மெட்டி ஓலி சீரியல் இரண்டாம் பாகம் எடுங்க, அதுல நீங்க நடிங்க என்றும் ரசிகர்கள் கேட்டு வறாங்க.

-விளம்பரம்-
Advertisement