இரண்டு முறை கொரோனாவில் இருந்து மீண்டுள்ள குக்கு வித் கோமாளி போட்டியாளர் – யாருன்னு தெரிஞ்சா ஷாக்காவீங்க.

0
1029
aswin
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் தமிழகத்தில் தற்போது இந்த வைரஸ் தீவிரமடைந்து உள்ளது.கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது. தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் கொரோனா தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. இப்படி ஒரு நிலையில் தனக்கு கொரோனா வந்தது பற்றி பகிர்ந்துள்ளார் அஸ்வின்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு வெப் சீரிஸ் படப்பிடிப்பில் இருந்தேன். திடீரென்று ஒருநாள் வாசனையும் ருசியும் இல்லாதது போல உணர்ந்தேன் அடுத்தநாளே கடுமையான காய்ச்சல் வந்துவிட்டது பின்னர் ஒருநாள் பரிசோதனையில் பாசிட்டிவ் என்று உறுதியானது. இதை அடுத்து மருத்துவர்கள் சொன்ன மருந்துகளை எடுத்துக் கொண்டு வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டேன். மருந்துகள் சாப்பிட்டும் கொஞ்சம் சரியாகும் பின்னர் சாய்ந்தரம் வேலையை காட்டும். இரண்டு நாட்கள் இதே போல அவஸ்தையை அனுபவித்து கொண்டிருந்தேன்.

இதையும் பாருங்க : 1008 பிரச்சன நாட்ல, உங்க பாத் ரூம் பிரச்சனைய – அர்ச்சனாவின் பாத் ரூம் டூர் வீடியோவை கலாய்த்த சனம் ஷெட்டி.

- Advertisement -

நல்லவேளையாக அப்போது என்னுடன் என் அம்மா அப்பா இல்லை. ஒரு வழியாக 20 நாட்களுக்கு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தேன். இப்படி ஒரு நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு படப்பிடிப்பில் இருந்தேன் எப்போதும்போல படப்பிடிப்பிற்கு முன்னர் டெஸ்ட் எடுத்தார்கள். அடுத்த நாள் காலையில் நீங்கள் படப்பிடிப்புக்கு வர வேண்டாம் என்று மெசேஜ் வந்தது என்னவென்று விசாரித்தால் உங்களுக்கு பாஸிட்டிவ் என்று சொன்னார்கள். என்னால் நம்பவே முடியவில்லை எனக்கு இப்போதுதான் வந்து போச்சு மறுபடியும் வர வாய்ப்பே இல்லை என்று அவர்களிடம் சொன்னேன் ஆனால் அவர்களோ இல்லை உங்களுக்கு பாசிட்டிவ் என்று தான் வந்திருக்கிறது என்று சொன்னார்கள்.

இருந்தாலும் எனக்கு சாதாரண தொற்று தான் என்பதால் மீண்டும் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சொன்னார்கள் இரண்டாவது முறை எனக்கு கொரோனா வந்ததும் மாலை நேரத்தில் தாங்க முடியாத தலைவலி வரும் மருத்துவர்கள் தந்த மருந்துகளை போட்டுக் கொண்டால் கூட அலாரம் வைத்து இது போல சாய்ந்தரம் 6 மணிக்கு தலைவலி வரும். இரவு முழுவதும் படாதபாடு பட்டேன் காலையில் தான் தூங்குவேன். 14 நாள் கழித்து மீண்டும் டெஸ்டில் நெகட்டிவ் என்று வந்தது இருந்தாலும் முன்பை போல என்னால் வேகமாக நடக்கவோ ஓடவோ முடியவில்லை.

-விளம்பரம்-

நடந்தாலே மூச்சு வாங்குகிறது அப்போதுதான் இந்த வைரசின் வீரியம் எனக்கு புரிந்தது. அம்மாவோட சமையலை சாப்பிடும்போது கேவலமா இருக்கு என்று சுலபமாக சொல்லி இருப்போம். ஆனால், இந்த இருபது நாட்கள் நான் என்ன சாப்பிடுகிறேன் என்று கூட தெரியாமல் சாப்பிட்ட போது தான் அந்த அருமை எனக்கு தெரிந்தது. முதல்முறை கொரோனா வந்தபோது தான் அம்மா அப்பாவிடம் சொன்னேன் இரண்டாவது முறை வரும்போது அவர்கள் பயப்படுவார்கள் என்று குணமான பின்னர் தான் சொன்னேன்.

Advertisement