‘பயப்படாதீங்க உங்கள ஒன்னும் பண்ண மாட்டோம் ‘ அஸ்வினை கண்டு பாய்ந்த பெண் ரசிகைகள் – வைரலாகும் வீடியோ.

0
1921
aswin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிக் பாஸுக்கு பின் பேராதரவை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. சொல்லப்போனால் பிக் பாஸ் 4 ஒளிபரப்பான போது அந்த நிகழ்ச்சியை விட இதற்கு தான் பெரும் ஆதரவு கிடைத்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சையமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் அஸ்வினும் ஒருவர்.

அஸ்வின், விஜய் டீவிக்கு புதிதானவர் அல்ல, இவர் கடந்த 2015 ஆம் ஆண்டே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டை வால் குருவி’ என்ற சீரியலில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. ஜூனில் துவங்கிய இந்த சீரியல் அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது. இந்த சீரியல் மொத்தம் 100 எபிசோடுகள் மட்டும் தான் ஒளிபரப்பானது.அதே போல துருவ் விக்ரம் அறிமுகமான ‘ஆதித்ய வர்மா’ படத்தில் துருவ் விக்ரமின் அண்ணனாகவும் நடித்து இருந்தார்.

- Advertisement -

சீரியல் மற்றும் படங்களில் நடித்தாலும் அஸ்வினுக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் ஏற்பட்டது. அதிலும் இந்த நிகழ்ச்சியால் இவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகளும் குவிந்து இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஹோட்டல் திறப்பு விழா ஒன்றிற்கு அஸ்வின் சிறப்பு விருந்தினராக சென்று இருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பெண் ரசிகைகள் அஸ்வினை கண்டதும் ஆரவாரம் செய்தார்கள். அதேபோல அஸ்வின் நடித்த பாடல் ஒன்றின் வரிகள் அழகாக பாடி டெடிகேட் செய்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பிரபல பிஜே நிக்கி தான் இருந்தார். அஸ்வினி கண்டு பெண் ரசிகர்கள் அனைவரும் ஆரவாரம் செய்தார்கள் அதனால் அஸ்வினும் கொஞ்சம் தயங்கினார் உடனே அங்கிருந்த பெண் ரசிகைகள் ‘அஸ்வினிடம் பயப்படாதீங்க நாங்கள் ஒன்னும் பண்ண மாட்டோம்’ என்று கேட்டனர். பின்னர் அஸ்வின் அவர்களை அழைக்க அடித்து பிடித்து அஸ்வினை நோக்கி வந்தார்கள் அந்த பெண் ரசிகைகள். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு உள்ளேயே அடித்து பிடித்து தள்ள, இதனால் கடுப்பான நிக்கி ‘ஏன் அடிச்சுட்டு இருக்கீங்க உங்கள தான் விட்டாச்சு இல்லை’ என்று கடுப்பானார் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

-விளம்பரம்-
Advertisement