ஒரு சீரியல் 90 எபிசோட் , இன்னோன்னு 100 எபிசோட் – அஸ்வின் நடித்த இரண்டு சீரியல் பற்றி தெரியமா ?

0
1087
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிக் பாஸுக்கு பின் பேராதரவை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. சொல்லப்போனால் பிக் பாஸ் 4 ஒளிபரப்பான போது அந்த நிகழ்ச்சியை விட இதற்கு தான் பெரும் ஆதரவு கிடைத்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சையமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் அஸ்வினும் ஒருவர்.

-விளம்பரம்-
Rettai Vaal Kuruvi Serial Story, Cast, Timings, Review, Photos and Videos

அஸ்வின், விஜய் டீவிக்கு புதிதானவர் அல்ல, இவர் கடந்த 2015 ஆம் ஆண்டே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டை வால் குருவி’ என்ற சீரியலில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. ஜூனில் துவங்கிய இந்த சீரியல் அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது. இந்த சீரியல் மொத்தம் 100 எபிசோடுகள் மட்டும் தான் ஒளிபரப்பானது.

- Advertisement -

இந்த சீரியலை தொடர்ந்து அஸ்வின் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நினைக்கத் தெரிந்த மனமே என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் குக்கு வித் கோமாளி சீசன் 1 போட்டியாளரான உமா ரியாஸ் கூட நடித்து இருந்தார். 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அதாவது கிறிஸ்துமஸ் தினத்தில் துவங்கப்பட்ட இந்த சீரியல் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமெல்லாம் முடிந்து விட்டது. இந்த சீரியல் 90 எபிசோட் மட்டுமே ஒளிபரப்பானது.

ஆனால் இவர் தொலைக்காட்சியில் மட்டுமல்ல படத்திலும் நடித்துள்ளார். அதே போல துருவ் விக்ரம் அறிமுகமான ‘ஆதித்ய வர்மா’ படத்தில் துருவ் விக்ரமின் அண்ணனாகவும் நடித்து இருந்தார். மேலும், பிக் பாஸ் 3 புகழ் லாஸ்லியா முதன் முதலாக நடித்த blassoo beauty soap விளம்பரத்தில் கூட அஸ்வின் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவர் ஓகே கண்மணி படத்தில் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று தான்.

-விளம்பரம்-
Advertisement